May 8, 2024
நாமக்கல்லில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம்

நாமக்கல்லில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம்

நாமக்கல்லில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கோட்டம் வருகின்ற 30-ம் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நாமக்கல் மாவட்டம், நாமக்கல் கோட்ட அளவிலான ஜனவரி 2024 ஆம் மாதத்திற்கான விவசாயிகள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் நாமக்கல் உட்கோட்டத்தில் உள்ள நாமக்கல், மோகனூர், சேந்தமங்கலம், இராசிபுரம் மற்றும் கொல்லிமலை ஆகிய அனைத்து பகுதி விவசாயிகளும் பயன்பெறும் வகையில் நாமக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில், நாமக்கல் வருவாய் […]

நாமக்கல்லில் மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் அறிவிப்பு

நாமக்கல்லில் மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் அறிவிப்பு

நாமக்கல் மாவட்ட அளவில் 14 மற்றும் 16 வயதிற்கு உட்பட்ட மாணவ, மாணவிகளுக்கான ஜூனியர் தடகள போட்டிகள் வருகின்ற 27ம் தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இது குறித்து நாமக்கல் மாவட்ட தடகள சங்க தலைவரும், நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினருமான சின்ராஜ், செயலாளர் வெங்கடாஜலபதி, ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாமக்கல் மாவட்ட அளவிலான ஜூனியர் தடகளப் போட்டிகள் வருகின்ற 27ம் தேதி (சனிக்கிழமை), நாமக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது. போட்டியில் கலந்து கொள்ளும் 14 […]

நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றத்தில் வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு

நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றத்தில் வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு

நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிக்கு, நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி டாக்டர் ராமராஜ் தலைமை வகித்தார். உறுப்பினர் ரமோலா முன்னிலை வகித்தார். இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின்படி, கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25 ஆம் தேதி தேசிய வாக்காளர் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் […]

நாமக்கல்லில் போலீஸ் உடற்தகுதி பயிற்சி வகுப்பு

நாமக்கல்லில் போலீஸ் உடற்தகுதி பயிற்சி வகுப்பு

போலீஸ் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில், உடற்தகுதி பயிற்சி வகுப்பு, வரும் பிப்ரவரி 8ம் தேதி துவங்குகிறது. இது குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும், தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகின்றன. சீருடைப்பணியாளர் தேர்வாணையம் மூலம் காவலர் பதவிக்கான எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, அடுத்தகட்டமாக […]

நாமக்கல்லில் ரூ. 1.35 கோடி மதிப்பிலான பருத்தி விற்பனை

நாமக்கல்லில் ரூ. 1.35 கோடி மதிப்பிலான பருத்தி விற்பனை

நாமக்கல் கூட்டுறவு சங்கத்தில் நடைபெற்ற ஏலத்தில் ரூ. 1.35 கோடி மதிப்பிலான பருத்தி விற்பனை செய்யப்பட்டது. நாமக்கல், திருச்செங்கோடு சாலையில், நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் (என்சிஎம்எஸ்) உள்ளது. இந்த சங்கத்தில் வாரம்தோறும் பருத்தி ஏலம் நடைபெறும். நாமக்கல், மோகனூர், வளையப்பட்டி, எருமப்பட்டி, பவித்திரம், வரகூர், சேந்தமங்கலம், காளப்பநாய்க்கன்பட்டி, பேளுக்குறிச்சி, நாமகிரிப்பேட்டை, புதுச்சத்திரம், வேலகவுண்டம்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் விளைந்த பருத்தியை கொண்டு வந்து ஏலத்தில் விற்பனை செய்வார்கள். திருச்செங்கோடு, […]

திருச்செங்கோட்டில் களைகட்டிய நிலா பிள்ளையார் நிகழ்ச்சி

திருச்செங்கோட்டில் களைகட்டிய நிலா பிள்ளையார் நிகழ்ச்சி

திருச்செங்கோடு பகுதிகளில் தைப்பூச நிலா பிள்ளையார் என்னும் விநோத நிகழ்ச்சியில் பெண்கள் கும்மியடித்து வழிபட்டனர். ஆண்டுதோறும் தை மாதம் முருகப்பெருமானின் பிறந்த நாள் என கருதப்படும் பூச நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் கூடி வரும் நாளில் தைப்பூச திருவிழா கொண்டாடப் படுவது வழக்கம். இதனை ஒட்டி முழு முதற்கடவுளான விநாயகருக்கு நன்றி செலுத்தும் விதமாக தைப்பூசத்திற்கு 5 நாள், 3 நாள் முன்னதாக முழு நிலவு நாள் வரை பெண்கள் ஒன்றுகூடி சித்ரான்னங்கள் வைத்து பிள்ளையார் வைத்து […]

அமைச்சர் மதிவேந்தன் மருத்துவமனையில் அனுமதி

அமைச்சர் மதிவேந்தன் மருத்துவமனையில் அனுமதி

வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் உடலநலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சட்டமன்றத் தொகுதியின் எம்.எல்.ஏ மதிவேந்தன். இவர் தமிழக அரசின் வனத்துறை அமைச்சராக இருந்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக அமைச்சர் மதிவேந்தன் தீராத வயிற்று வலி காரணமாக அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து, ஸ்கேன் செய்ததில் அவருக்கு குடலிறக்கம் இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து அமைச்சர் மதிவேந்தன் நேற்று கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு அறுவை […]

சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி பெண்களுக்கு பாலியல் தொந்தரவு

சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி பெண்களுக்கு பாலியல் தொந்தரவு

திருச்செங்கோட்டில் இயங்கி வரும் தனியார் ஐ.ஏ.எஸ் அகாடமியில், படித்து வந்த மாணவிகளிடம் ஆபாச வார்த்தைகளில் பேசி, பாலியல் தொந்தரவு கொடுத்த தனியார் ஐ.ஏ.எஸ். அகாடமியின் உரிமையாளர் அஸ்வின் என்பவர், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையம் அருகில் தனியார் ஐ.ஏ.எஸ் அகாடமி நடத்தி வருபவர் சீதாராம் பாளையத்தை சேர்ந்த ரங்கநாதன் என்பவரது மகன் அஸ்வின் என்கிற மெய்யழகன்(30). இவரது அகாடமியில் சுமார் 30க்கும் மேற்பட்ட பெண்கள் பயின்று […]