...
April 24, 2024
#விளையாட்டு

நாமக்கல்லில் பயிற்சி பெற்ற மாணவியர் வெங்கல பதக்கம்

நாமக்கல்லில் பயிற்சி பெற்ற மாணவியர் அணி தேசிய வாலிபால் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றனர். 

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் பள்ளி மாணவ மாணவியருக்கான 67வது “தேசிய வாலிபால் சாம்பியன்ஷிப்” போட்டிகள் நடைபெற்றது. இப் போட்டியில் கலந்து கொண்ட 14 வயதிற்குட்பட்ட தமிழக மாணவியர் அணி பஞ்சாப் அணியை வீழ்த்தி வெண்கல பதக்கம் வென்றது.

தமிழக அணிக்கான தேர்வு மற்றும் பயிற்சி முகாம் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் RN ஆக்ஸ்போர்டு பள்ளியில் நடைபெற்றது. இந்த முகாமில் தமிழகம் முழுவதும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவியர் கலந்து கொண்டனர். 15 நாள் பயிற்சிக்குப் பிறகு ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள KIIT (கலிங்கா) பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 67 வது தேசிய பள்ளி மாணவ – மாணவியருக்கு இடையேயான வாலிபால் போட்டி டிசம்பர் 22 முதல் 26 ஆம் தேதி வரை நடைபெற்ற போட்டியில் பங்கேற்றனர். தமிழக மாணவியர் அணியின் பயிற்சியாளராக ருக்மான் அலி பணியாற்றினார். இப்போட்டியில் ஹரியானா, மேற்கு வங்கம், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், ஹிமாச்சல் பிரதேசம் மற்றும் பஞ்சாப் அணியை வீழ்த்தி வெண்கல பதக்கம் பெற்று சாதனை புரிந்தனர். வெற்றி பெற்ற மாணவியருக்கு இந்திய ஹாக்கி சம்மேளனத்தின் தலைவர் திலீப் திர்க்கி அவர்கள் கேடயம், வெண்கல பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஒடிசா மாநில கல்வி மற்றும் விளையாட்டு துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

வெற்றி பெற்ற தமிழக மாணவியர் அணியை தமிழ்நாடு மாநில முதன்மை உடற்கல்வி ஆய்வாளர்கள் கோபாலகிருஷ்ணன் (ஆண்கள்), நிர்மலா தேவி (பெண்கள்) மற்றும் நாமக்கல் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் கார்த்திகேயன் ஆகியோர் பாராட்டினர். 

மேலும் சிறப்பாக பயிற்சி பெற்று வெண்கல பதக்கம் வென்ற தமிழக மாணவியர் அணியை பாண்டமங்கலம் ஆர் என் ஆக்ஸ்போர்டு பள்ளியின் தலைவர் சண்முகம், போட்டியின் போது அணி உடன் சென்ற பள்ளியின் தாளாளர் சக்திவேல், செயலாளர் ராஜா, இயக்குனர்கள் சேகர், அருள், மற்றும் சம்பூர்ணம் நல்லசாமி ஆகியோர் பாராட்டினர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Seraphinite AcceleratorBannerText_Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.