...
April 20, 2024
#செய்திகள்

மோகனூர் சாலையில் உள்ள அரசு மருத்துவமனை மீண்டும் செயல்பாட்டுக்கு வருமா..? நாமக்கல் எம்.எல்.ஏ சொன்ன ஹேப்பி நியூஸ்..

Will the Govt Hospital on Mohanur Road be functional again..? Namakkal MLA said happy news

நாமக்கல் – மோகனூர் சாலையில் உள்ள பழைய அரசு மருத்துவமனையை பொதுமக்களின் வசதிக்காக தாலுகா மருத்துவமனையாக மாற்ற வேண்டும் என சுகாதாரத்துறை முதன்மை செயலாளருக்கு நாமக்கல் எம்.எல்.ஏ ராமலிங்கம் அவர்கள் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார்.

நாமக்கல் எம்.எல்.ஏ.ராமலிங்கம் சுகாதாரத்துறை முதன்மை செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார்.

அக்கடிதத்தில், நாமக்கல் நகரின் மையப் பகுதியில் மோகனூர் சாலையில் இயங்கி வந்த நாமக்கல் மாவட்ட அரசு பொது மருத்துவமனைக்கு நாள்தோறும் 1500 முதல் 2000 நோயாளிகள், வெளி நோயாளிகளாக வந்து செல்வார்கள்.

தற்போது, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறம் அமைந்துள்ள “நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை” புதிய கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது. இதனால் மருத்துவமனைக்கு வரும் அனைவரும் இனி நாமக்கல்லில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குத்தான் செல்ல வேண்டும்.

இதனால் மக்கள் மிகுந்த சிரமத்துடன் இருக்கிறார்கள். நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் செயல்படும் என்று சொல்கிறார்கள் அங்கு ஒரே ஒரு மருத்துவர் மட்டுமே உள்ளார்.

இனி அந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரும் மருத்துவர்கள் நாள்தோறும் 1500 வெளி நோயாளிகளை பார்க்க வேண்டும். 24 மணி நேர சேவைக்கும் வழியில்லை , மாவட்டத்தின் அனைத்து நகரங்களிலும் ஒரு அரசு பொது மருத்துவமனை இயங்குகிறது. மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஒரு மேல் சிகிச்சைக்கான மருத்துவமனையாகவே செயல்படுகிறது.

நாமக்கல் அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் பல்வேறு நிர்வாக அலுவலகங்கள் மற்றும் சித்தா மருத்துவமனைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட கட்டிடங்கள் போக பெரிய அளவிலான மூன்று கட்டிடங்கள் மற்றும் சிறிய கட்டிடங்கள் அறுவை சிகிச்சை அரங்கம், சமையல் கூடம், சலவையகம் அனைத்தும் உள்ளன.

எனவே மக்கள் நலன் கருதி முன்பு அரசு பொது மருத்துவமனை செயல்பட்ட வளாகத்தில் சிறிய அளவில் தாலுகா மருத்துவமனை ஒன்றை இயக்குனர் மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் அவர்களின் கட்டுப்பாட்டில் ஏற்படுத்தி தர வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்,

இதற்கு பதிலளித்து கடிதம் எழுதியுள்ள மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை கூடுதல் செயலாளர்கள் சுப்பிரமணியம் மற்றும் லாவண்யவீணா ஆகியோர் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினரின் கோரிக்கையின் மீது மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநரிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளதாக பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.

இதையும் படிங்க : (05.01.24) நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறிகள் விலை நிலவரம்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Seraphinite AcceleratorBannerText_Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.