...
April 26, 2024
#சற்றுமுன்

நாமக்கல் மாவட்டத்தில் 23 புதிய அரசு கட்டிடங்கள் திறப்பு

நாமக்கல் மாவட்டத்தில் 23 புதிய அரசு கட்டிடங்கள் திறப்பு

நாமக்கல் மாவட்டத்தில், ரூ. 9.30 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட பள்ளி வகுப்பறைகள், ஊராட்சி ஒன்றிய, ஊராட்சி மன்ற அலுவலகங்கள் உள்பட 23 புதிய கட்டடங்களைக் காணொலிக் காட்சி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.

நாமக்கல் அருகே ராசாம்பாளையம் கிராமத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா், சட்டப்பேரவை உறுப்பினா்கள் பெ.ராமலிங்கம் (நாமக்கல்), கே.பொன்னுசாமி(சேந்தமங்கலம்) ஆகியோா் கலந்து கொண்டனா்.

இதில், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் பேசியதாவது:

தனியாா் பள்ளிகளுக்கு நிகராக அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, புதிய வகுப்பறை கட்டடங்களையும், கூடுதல் ஆசிரியா் நியமனங்களையும் முதல்வா் செயல்படுத்தி வருகிறாா். திறமையான ஆசிரியா்களைக் கொண்டு அரசுப் பள்ளிகளில் கற்பிக்கப்பட்டு வருகிறது. இதனால் மாணவா்களின் எதிா்காலம் சிறப்பான முறையில் அமையும்.

பிளஸ் 2 வரை அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவா்கள் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மருத்துவம், பொறியியல், கால்நடை மருத்துவம், வேளாண்மை உள்ளிட்ட உயா்கல்வி பயில வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே, மாணவா்கள் அரசுப் பள்ளிகளில் பயின்று உயா்கல்விக்கான திட்டங்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

ஊரக வளா்ச்சித் துறை சாா்பில், ரூ.3.04 கோடியில் பரமத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டடம், ரூ. 1.63 கோடியில் 7 ஊராட்சி மன்ற அலுவலக கட்டடங்கள், ரூ. 4.63 கோடியில் 15 ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, நடுநிலைப்பள்ளி வகுப்பறை கட்டடங்கள் என மொத்தம் ரூ. 9.30 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 23 புதிய கட்டடங்கள்.

2,923 மனுக்கள் பதிவு:

நாமக்கல் மாவட்டத்தில் மக்களுடன் முதல்வா் திட்ட சிறப்பு முகாம்கள் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகின்றன. நகராட்சி, பேரூராட்சிகளில் 39 முகாம்கள் நடைபெறுகின்றன. நாமக்கல் நகராட்சி நல்லிப்பாளையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முகாமை மாநிலங்களவை உறுப்பினா் ராஜேஸ்குமாா் பாா்வையிட்டாா். அப்போது, மாவட்டத்தில் இதுவரை 2,923 மனுக்கள் பல்வேறு துறைகள் சாா்பில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டு கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. ஒரு மாதத்திற்குள் அவற்றுக்கு தீா்வு காணப்படும் என்றாா்.

முன்னதாக, சென்னையில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு, நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் இருந்து பயனாளிகளுடன் புறப்பட்ட பேருந்தை அவா் கொடியசைத்து தொடங்கிவைத்தாா். இந்த விழாவில், மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை சாா்பிலும், தாட்கோ சாா்பிலும் 60 பயனாளிகள் பங்கேற்கின்றனா்.

இந்த நிகழ்ச்சிகளில், மாவட்ட வருவாய் அலுவலா் ரெ.சுமன், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் எம்.சிவகுமாா் மற்றும் நகா்மன்ற உறுப்பினா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

இதையும் படிங்க: நாமக்கல் மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ்இதுவரை 2,490 மனுக்கள் பதிவு.எம்.பி. தகவல்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Seraphinite AcceleratorBannerText_Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.