...
May 3, 2024
நாமக்கல் அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் திருவிழாவில் 5 ஆயிரம் பேருக்கு கமகமக்கும் அசைவ விருந்து பரிமாறப்பட்டது.

ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோத திருவிழா.. எங்கே தெரியுமா..?

நாமக்கல் அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் திருவிழாவில் 5 ஆயிரம் பேருக்கு கமகமக்கும் அசைவ விருந்து பரிமாறப்பட்டது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த புதுப்பட்டி ஒட்டியுள்ள போதமலை தொடர்ச்சியில் பிரசித்தி பெற்ற கள்ளவழி கருப்பணார் கோவில் உள்ளது. மழைவாழ் மக்களுக்கான இந்த கோவிலில் ஆண்கள் மட்டுமே சென்று வழிபட வேண்டும். மழைவாழ் குடும்பத்தினர் தான் பூசாரியாகவும் உள்ளனர். இங்கு வருடம்தோறும் தைமாதம் இறுதி ஞாயிற்றுக்கிழமை கிடா வெட்டி சமாபந்தி விருந்து வைக்கப்படும். இதையொட்டி மாலை 7 மணிக்கு […]

ராசிபுரத்தில் வருகின்ற 23ம் தேதி மின் நிறுத்தம்

ராசிபுரத்தில் வருகின்ற 23ம் தேதி மின்நிறுத்தம்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் துணை மின்நிலையத்தில் வருகின்ற 23-ம் தேதி பராமரிப்பு பணி நடைபெறுவதால் அன்றைய தினம் மின்நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ராசிபுரம் மின்வாரிய செயற்பொறியாளர் சனநாயகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளுக்கும் சீரான மின்சார விநியோகம் செய்வதற்காக, ஒவ்வொரு துணை மின் நிலையத்திற்கு உட்பட பகுதியிலும், மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் துணை மின் நிலையத்தில் வரும் 23ம் தேதி […]

“Mrs – Tamilnadu” பட்டம் வென்ற ராசிபுரத்தை சேர்ந்த பெண்ணுக்கு வாழ்த்து

மிஸஸ் தமிழ்நாடு அழகியாக ராசிபுரத்தை சேர்ந்த கௌசல்யா என்பவர் தேர்வு செய்யப்பட்டதை அடுத்து அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் கோபி(39),கௌசல்யா(34) என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். கௌசல்யா ராசிபுரம் பகுதியில் பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். இவருக்கு, சிறுவயது முதலே அழகு கலை மீது மிகுந்த ஆர்வம் இருந்து வந்ததால் பல்வேறு அழகிகள் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற நிலையில் கடந்த வருடம் […]

ராசிபுரம் அருகே சாக்கடையில் வீசப்பட்ட ஆண் சிசு

ராசிபுரம் அருகே சாக்கடையில் வீசப்பட்ட ஆண் சிசு

ராசிபுரம் அருகே பிறந்து சில மணி நேரங்களே ஆன ஆண் சிசு உயிரிழந்த நிலையில், சாக்கடையில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் லட்சுமி தெரு பகுதியில் இன்று காலை தூய்மை பணிகளுக்காக தூய்மை பணியாளர்கள் வழக்கம் போல் சாக்கடையில் தூய்மை பணியை மேற்கொண்டு வந்தனர். அப்போது சாக்கடையில் பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் சிசு தொப்புள் கொடியுடன் கைகால்கள் அசைவின்றி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து, சம்பவம் குறித்து […]

நாமக்கல்லில் நாளை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

நாமக்கல்லில் நாளை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

நாமக்கல் மாவட்டத்தில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தனியார்துறை நிறுவனங்களும் தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் “தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்” நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் மாதந்தோறும் மூன்றாவது வெள்ளிக்கிழமை நடைபெறும். இம்மாதத்திற்கான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமானது நாளை (19.01.2024) ராசிபுரம் அடுத்த காக்காவேரி முத்தாயம்மாள் கலை மற்றும் […]

நாமக்கல்லில் இப்படி ஒரு கிராமங்களா..! 100 ஆண்டுகளாக பொங்கல் பண்டிகையை கொண்டாடத கிராமம்

நாமக்கல்லில் இப்படியும் சில கிராமங்களா..! 100 ஆண்டுகளாக பொங்கல் பண்டிகையை கொண்டாடத கிராமங்கள்

நாமக்கல் மாவட்டத்தில் 100 ஆண்டுகளாக பொங்கல் பண்டிகையை கொண்டாடத கிராமங்கள் உள்ளன. அது பற்றிய சுவாரஸ்ய தகவல்களை காணலாம். தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை, மாநிலம் முழுதும் வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். குறிப்பாக, விவசாயத்தைப் பிரதானத் தொழிலாகக் கொண்ட பகுதிகளில் பொங்கல் பண்டிகை களைகட்டும்.  சிங்கிலிபட்டியில் 100 ஆண்டுகளாக பொங்கல் கொண்டாடப்படுவதில்லை  ..! இந்த ஆண்டு  பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது. ஆனால், நாமக்கல் அருகே சிங்கிலிப்பட்டி கிராம மக்கள் கொரோனா தொற்று ஏற்பட்ட […]

ராசிபுரம் அருகே நிலத்தகராறில் மாமனாரை துப்பாக்கியால் சுட்ட மருமகன்

ராசிபுரம் அருகே நிலத்தகராறில் மாமனாரை துப்பாக்கியால் சுட்ட மருமகன்

ராசிபுரம் அருகே நிலத்தகராறில் மாமனாரை துப்பாக்கியால் சுட்டதில் மாமனார் வெள்ளையன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த புதுப்பட்டி அருகே கெடமலை பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி வெள்ளையன்(60). இவரின் அண்ணன் மகளான குப்பாயி என்பவரை, சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியைச் சேர்ந்த சௌந்தர்ராஜனை என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். மாமனார் வெள்ளையன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தனது 4 சென்ட் நிலத்தை வேறு ஒருவருக்கு பத்திரத்தை அடமானமாக வைத்து, 20 ஆயிரம் ரூபாயை […]

ராசிபுரத்தில் கேப்டன் விஜயகாந்த் உயிரிழந்த செய்தி கேட்டு தேமுதிக நிர்வாகி மரணம்

தேமுதிக தலைவரும்,நடிகருமான விஜயகாந்த் உயிரிழந்த செய்தியை தாங்க முடியாமல் ராசிபுரம் அருகே கட்சி நிர்வாகி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேமுதிக கட்சியின் நிறுவனத் தலைவரும் நடிகருமான விஜயகாந்த் நேற்று காலையில் உடல்நலக் குறைவால் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழக முழுவதும் கட்சி நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் என ஏராளமான அவரது இறப்பிற்கு அஞ்சலி செலுத்தினர். திருவுருவ படத்திற்கு மரியாதை இந்த நிலையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டை பகுதியில் தேமுதிக கட்சி நிர்வாகிகள் […]

சிறுதானியங்கள் சாகுபடியில் நாமக்கல் மாவட்டம் சாதனை

நாமக்கல் மாவட்டத்தில், 2023 -ஆண்டு 79,327 எக்டர் சிறுதானியங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் தெரிவித்தார். நாமக்கல் மாவட்டம், நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அரசினர் மகளிர் கலை கல்லூரியில், உணவு பாதுகாப்புத்துறையின் சார்பில், இன்று (29.12.2023) சிறுதானிய உணவு விழிப்புணர்வு திருவிழாவை முன்னிட்டு, சிறுதானிய பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது. இதில் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், மாவட்ட ஆட்சியர் உமா, நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.ராமலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு கண்காட்சியை பார்வையிட்டனர். இதன் பின்னர் […]

ராசிபுரத்தில் 700க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற மாபெரும் மராத்தான்

புற்றுநோய் குறித்து பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ராசிபுரம் தனியார் கல்லூரி சார்பில் மாபெரும் மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் 700க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த காக்காவேரி பகுதியில் முத்தாயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் புற்றுநோய் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாபெரும் மாரத்தான் போட்டியானது இன்று (24.12.2023) நடைபெற்றது.   இந்த போட்டியில் 5 கிலோமீட்டர்,10 கிலோமீட்டர் என இரு பிரிவுகளின் […]

Seraphinite AcceleratorBannerText_Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.