...
April 18, 2024
#செய்திகள் #பிளாஷ் நியூஸ்

பொங்கல் பரிசு தொகுப்பு : நாமக்கல் ஆட்சியர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!

நாமக்கல் மாவட்டத்தில் நாளை முதல் பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் விநியோகம் : ஆட்சியர் அறிவிப்பு

2024 ஆம் ஆண்டு தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை சிறப்பாக கொண்டாட தலா ஒரு கிலோ பச்சரிசி. ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக்கரும்பு மற்றும் ரூ.1000/- ரொக்கப்பணம் பொங்கல் பரிசாக வழங்க தமிழ்நாடு அரசால் ஆணைப் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இப்பரிசு தொகுப்பு அட்டைதாரர்கள் அனைவருக்கும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவது குறித்து மாவட்ட ஆட்சியர் உமா செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார்.

அதில், நாமக்கல் மாவட்டத்தில் மத்திய, மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிவோர், சர்க்கரை அட்டைதாரர்கள், பொருளில்லா அட்டைதாரர்கள் தவிர்த்து ஏனைய குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் நாளை முதல் (07.01.2024) முதல் 09.01.2024 வரை வழங்கப்படும். அதில், நாள், நேரம் போன்ற விவரங்கள் குறிப்பிட்டு முன்கூட்டியே டோக்கன் வழங்கப்படும். அதன்பின் பொங்கல் பரிசு தொகுப்பு 10.01.2024 முதல் 14.01.2024 வரை தொடர்ச்சியாக விநியோகம் செய்யப்படும்.

இந்த பொங்கல் பரிசு தொகுப்பு நியாயவிலைக் கடை விற்பனை முனைய இயந்திரத்தில் (POS) பயோமெட்ரிக் முறை மூலம் வழங்கப்படும். பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்ட விவரம் குடும்ப அட்டைதாரர்களின் கைபேசிக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களில் எவேரனும் ஒருவர் பொங்கல் பரிசுத்தொகுப்பு பெற்றுக்கொள்ளலாம்.

நாமக்கல் மாவட்டத்தில் நாளை முதல் பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் விநியோகம் : ஆட்சியர் அறிவிப்பு

பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதில் ஏதேனும் புகார்கள் இருப்பின் கீழ்க்கண்ட தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

வ.எண் வட்டம் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்கள்
1 மாவட்ட கட்டுப்பாட்டு அறை 04286-281116
2 நாமக்கல் 94450 00233
3 இராசிபுரம் 94450 00234
4 சேந்தமங்கலம் 94457 96437
5 மோகனூர் 94999 37026
6 கொல்லிமலை 94457 96436
7 திருச்செங்கோடு 94450 00235
8 பரமத்தி-வேலூர் 94450 00236
9 குமாரபாளையம் 94457 96438

எனவே தகுதியுள்ள குடும்ப அட்டைதாரர்கள் டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் சம்மந்தப்பட்ட நியாயவிலைக் கடைகளுக்கு சென்று பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க :பரமத்தி வேலூரில் வெல்லத்தில் கலப்படம் : 12 டன் சர்க்கரை பறிமுதல்..!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Seraphinite AcceleratorBannerText_Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.