...
April 24, 2024
#டிரெண்டிங் நியூஸ்

வசந்தபுரத்தில் அரசு சார்பில் கட்டப்படும் பிரமாண்டமான கட்டிடம் எதற்கு என தெரியுமா

நாமக்கல்லில் சுமார் 6.60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமையவுள்ள புதிய ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என். ராஜேஸ்குமார் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.

புதிய ஒழுங்குமுறை விற்பனை கூடம்

நாமக்கல் மாவட்டம், நாமக்கல் ஊராட்சி ஒன்றியம், வசந்தபுரம் ஊராட்சியில் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் இன்று (29.12.2023) வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண்மை வணிகத்துறை சார்பில், ரூ.6.60 கோடி மதிப்பீட்டில் புதிய நாமக்கல் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைக்கும் பணிக்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா அவர்கள் தலைமையில், சட்டமன்ற உறுப்பினர்கள் பெ.ராமலிங்கம் (நாமக்கல்) அவர்கள், திரு.கு.பொன்னுசாமி (சேந்தமங்கலம்) அவர்கள் ஆகியோர் முன்னிலையில் அடிக்கல் நாட்டினார்.

சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவிப்பு

2023-24 ஆம் ஆண்டு வேளாண் நிதிநிலை அறிக்கையில் மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் அவர்களால் நாமக்கல் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு புதிய கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும் என சட்டசபையில் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நாமக்கல் மாவட்டம், வசந்தபுரம் கிராமத்தில் 2.0 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. 

6.60 கோடி மதிப்பீட்டில் விற்பனை கூடம்

அதன்படி, புதிய நாமக்கல் ஒழுங்குமுறை விற்பனை கூடம், ரூ.2.00 கோடி மதிப்பில் e-NAM பரிவர்த்தனைக்கூடம், ரூ.2.00 கோடி மதிப்பில் சேமிப்பு கிடங்கு, ரூ.14.00 இலட்சம் மதிப்பில் உலர் களம், ரூ.2.46 கோடி மதிப்பில் விவசாயிகள் ஓய்வறையுடன் கூடிய பரிவர்த்தனைக்கூடம் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளுடன் மொத்தம் ரூ.6.60 கோடி மதிப்பில் கட்டப்படவுள்ளது.

ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் பயன்பாடுகள்

உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படுவதன் மூலம் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விற்பனை செய்ய முடியும். சேமிப்பு கிடங்கில் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை நீண்ட நாட்களுக்கு பாதுகாப்பாக சேமித்து வைக்க முடியும். மேலும், பொருளீட்டுக்கடன் பெறவும் இயலும். சேமிப்பு வசதி ஏற்படுத்தப்படுவதன் மூலம் அறுவடைக்கு பிந்தைய சேதம் தவிர்க்கப்படுவதுடன் மழை காலங்களில் தானியங்களை பாதுகாப்பாக வைத்திட முடியும். 

மேலும், விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உறுதி செய்யப்படுவதுடன், இடைத்தரகர்களது இடையூறு இல்லாமல் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை அதிக விலைக்கு விற்று பயன்பெற முடியும். ஆதார திட்டம் (Price Support Scheme)இன் கீழ் பச்சை பயிறு, உளுந்து, கொப்பரை போன்ற விளைபொருட்கள் அரசால் கொள்முதல் செய்யப்படுதன் வாயிலாக விவசாயிகளுக்கு அதிக இலாபம் கிடைக்க வழி வகுக்கும். 

e-NAM எனப்படும் “மின்னனு தேசிய வேளாண் சந்தை” இணைய முகப்பு வாயிலாக விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை உள்ளூர் மட்டுமல்லாமல் பிற மாவட்டங்களுக்கும் விற்பனை செய்து விளைபொருட்களுக்கான தொகை நேரடியாக விவசாயிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும். 

இந்நிகழ்ச்சியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை இணை இயக்குநர் துரைசாமி, நாமக்கல் விற்பனைக்குழு தனி அலுவலர் நாசர், நாமக்கல் விற்பனைக்குழு செயலாளர் தர்மராஜ் உட்பட உள்ளாட்சி பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Seraphinite AcceleratorBannerText_Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.