...
April 26, 2024
#செய்திகள் #டிரெண்டிங் நியூஸ்

நாமக்கல்லில் நடந்த 492 சாலை விபத்துகளில் 512 நபர்கள் மரணம் : அதிர்ச்சி ரிப்போர்ட்

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா தலைமையில் சாலை பாதுகாப்பு குறித்த மாதாந்திர ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
 
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (28.12.2023) சாலை பாதுகாப்பு குறித்த மாதாந்திர ஆய்வு கூட்டம், மாவட்ட ஆட்சியர் உமா அவர்கள் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஸ் கண்ணன்  அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் ஆட்சியர் பேசுகையில்,
நாமக்கல் மாவட்டத்தில் விபத்துகளை தடுப்பதற்கும், விபத்தினால் மரணங்கள் ஏற்படுவதை தடுக்கவும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளி மாணவச் செல்வங்களுக்கு சாலை பாதுகாப்பு மற்றும் சாலை விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். போக்குவரத்து அலுவலர்கள், காவல்துறையினர் ஆகியோர் பொதுமக்கள் வேகமாக மற்றும் போதையில் வாகனத்தை இயக்குவது முற்றிலுமாக தடுக்கப்பட வேண்டும்.

மேலும் சரக்கு வாகனங்களில் பொதுமக்கள் பயணம் மேற்கொள்ள அனுமதிக்க கூடாது. பள்ளி மாணவர்கள் வாகனங்கள் ஓட்டக்கூடாது. நெடுஞ்சாலைத்துறையினர் விபத்து ஏற்படும் இடங்களில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அறிவிப்பு பலகைகள், விபத்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நாமக்கல் மாவட்டத்தை விபத்தில்லா மாவட்டமாக உருவாக்கிட அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

எனவே மாணவர்கள், பொதுமக்கள், பெற்றோர்கள் மோட்டார் வாகன சட்டவிதிகளை பின்பற்றி மாவட்ட நிர்வாகத்திற்கும், போக்குவரத்து துறைக்கும், காவல் துறைக்கும் விபத்துகளையும், விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளையும் பெருமளவில் குறைக்க உரிய ஒத்துழைப்பு நல்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் உமா தெரிவித்தார்.

நாமக்கல் மாவட்டத்தில் நடந்த 492 சாலை விபத்துகளில் 512 நபர்கள் உயிரிழந்துள்ளனர். கடந்த மாதம் செல்போன் பேசிகொண்டு வாகனம் ஓட்டிய 125 வாகன ஓட்டுநர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதமாக ரூ.1.25 இலட்சமும், மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டிய 12 வாகன ஓட்டுநர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதமாக ரூ.70,000/-ம், தலைகவசம் அணியாமல் வாகனம் ஓட்டிய 730 வாகன ஓட்டுநர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதமாக ரூ.6.02 இலட்சமும், சரக்கு ஏற்றி செல்லும் மினி/சரக்கு ஆட்டோக்களில் பொதுமக்களை ஏற்றி சென்ற 35 வாகன ஓட்டுநர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதமாக ரூ.56,300/-ம், வசூல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், இன்னுயிர் காப்போம் திட்டம் – நம்மை காக்கும் 48 திட்டங்களின் கீழ் 3,798 நபர்களுக்கு ரூ.3.12 கோடி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் மூலம் வழங்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர் ரெ.சுமன், நெடுஞ்சாலைகள் துறை கோட்டப்பொறியாளர் குணா, வட்டார போக்குவரத்து அலுவலர்கள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: ஆன்லைன் ரம்மியால் ஏற்பட்ட கடன் : கடனை அடைக்க வயதான தம்பதியனரை கொலை கொள்ளை அரங்கேற்றம் 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Seraphinite AcceleratorBannerText_Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.