...
April 20, 2024
#சற்றுமுன்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் : நாமக்கல்லில் அதிமுகவினர் கொண்டாட்டம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் : நாமக்கல்லில் அதிமுகவினர் கொண்டாட்டம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நாமக்கல் நகர அதிமுக சார்பில் கொண்டாடப்பட்டது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76-வது பிறந்தநாள் இன்று (24.02.2024) அதிமுக சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்நிலையில் நாமக்கல் நகர அதிமுக சார்பில் இன்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பாக கொண்டாடப்பட்டது. நாமக்கல் மெயின் ரோட்டில் அமைந்துள்ள மூன்று சிலை அருகே, அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் திருவுருவப்படத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ கே.பி.பி பாஸ்கர் தலைமையிலான அதிமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

இதில், அதிமுக பொதுக்குழு உறுப்பினர் மயில் N. சுதந்திரம், வார்டு செயலாளர்கள், சார்பு மன்ற நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க : அலங்காநத்ததில் ஜல்லிக்கட்டு போட்டி

 

Seraphinite AcceleratorBannerText_Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.