...
April 23, 2024
#செய்திகள்

ரயில் பயணிகளுக்கு ஹாப்பி நியூஸ் : தரம் உயர்த்தப்பட உள்ள நாமக்கல் ரயில் நிலையம்

NAMAKKAL RAILWAY STATION IS UPGRADE TO HIGHLY CONFRICATIONS

அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ், நாமக்கல் ரயில் நிலையத்தில் ரூ. 13.28 கோடி மதிப்பில் மேம்பாட்டு திட்டப்பணிகளை நேற்று முன்தினம் (26.02.24) காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.

அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும், 554 ரயில் நிலையங்களின் மறு மேம்பாட்டு பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், 1500 சாலை மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகளுக்கு அடிக்கல் நாட்டினார். முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார். அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ், சேலம் கோட்டத்தில் 8 ரயில் நிலையங்களை மறுவடிவமைப்பு செய்ய பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.

சேலம் கோட்டத்தில், அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ், திருப்பத்தூர். மொரப்பூர், பொம்மிடி, ஈரோடு, கோவை வடக்கு, மேட்டுப்பாளையம், நாமக்கல், சின்ன சேலம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் மேம்பாட்டு பணிகள், 32 சாலை மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள் போன்றவற்றிற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

நாமக்கல் ரயில் நிலையம் கடந்த 2013ம் ஆண்டு மே மாதம் துவக்கப்பட்டது. நாமக்கல் நகரம் லாரி பாடி பில்டிங், கோழிப்பண்ணை, ஜவுளித்தொழில் உள்ளிட்ட தொழில்களின் மையமாக உள்ளது. நாமக்கல் ரயில் நிலையம் பிராந்தியத்தின் போக்குவரத்து வலையமைப்பில் ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் பொருட்களை தமிழகம் மற்றும் வெளிநாடுகளில் உள்ள சந்தைகளுக்கு கொண்டு செல்வதில் நாமக்கல் ரயில் நிலையம் முக்கிய பங்கு வகிக்கிறது. நாமக்கல் ரயில் நிலையத்தை ரூ. 13.28 கோடி மதிப்பில் புதுப்பிக்க ரயில்வே துறை நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதற்கான பணியை நேற்று முன்தினம் (26.02.24) பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.

இந்த திட்டத்தின் கீழ், நாமக்கல் ரயில் நிலையத்தின், சுற்றுப்பகுதி மற்றும் தளங்கள் மேம்படுத்தப்படும். தற்போதுள்ள டெர்மினல் கட்டிடம் முழுமையாக புதுப்பிக்கப்படும். நுழைவு வளைவு புதுப்பிக்கப்படும். இரு சக்கர மற்றும் கார்கள் நிறுத்தும் இடங்கள் விரிவாக அமைக்கப்படும். பயணிகளுக்கு கூடுதலாக கழிவறை வசதி ஏற்படுத்தப்படும். மாற்றுத்திறனாளி பயணிகளுக்கான சாய்வு தளங்கள், லிஃப்ட், புதிய பாலம் அமைக்கப்படும். தற்போதுள்ள சுரங்கப்பாதைக்கு ஒரு லிஃப்ட் அமைக்கப்படும். காத்திருப்பு அறை, அறிவிப்பு பலகை போன்றவை அமைக்கப்பட்டு பயணிகளுக்கு கூடுதல் வசதி செய்து தரப்படும் என ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

Seraphinite AcceleratorBannerText_Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.