May 8, 2024
நாமக்கல்லில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் வருமான துறையினர் சோதனை

நாமக்கல்லில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் வருமான துறையினர் சோதனை

நாமக்கல்லை சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவர் சத்தியமூர்த்தி & கோ என்ற பெயரில் நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் அரசு மருத்துவக் கல்லூரி, தமிழக அரசின் குடிநீர் திட்டங்கள், குடிசை மாற்று வாரியம் குடியிருப்புகள் உள்ளிட்ட அரசு பணிகளை ஒப்பந்தம் எடுத்து எடுத்து பல ஆண்டுகளாக கட்டுமான பணிகளை செய்து வருகிறார். நாமக்கல்லில் தற்போது புதிதாக பயன்பாட்டிற்கு வந்த அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை சத்திய மூர்த்தி & கோ நிறுவனம் தான் கட்டுமான […]

நாமக்கல்லில் சிறுமிக்கு சூடு வைத்து சித்திரவதை செய்யப்பட்டதாக புகார்.

ஏழு வயது சிறுமிக்கு காலில் சூடு வைத்து சித்திரவதை செய்யப்பட்டதாக புகார் எழுந்ததையடுத்து பள்ளிபாளையம் போலீசார் மற்றும் குழந்தைகள் நல மைய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஒட்டமெத்தை அருகே உள்ள, கொல்லப்புரத்தான் தோட்டம் என்ற பகுதியில் வசித்து வருபவர்கள் மணிகண்டன்- வனிதா தம்பதியினர். இவர்களுக்கு ஏழு வயது பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுமி குதிகால் இரண்டிலும் அதிக அளவு காயங்கள் இருந்ததைக் கண்ட அக்கம் […]

பைக் மோதிய விபத்தில் பழனிக்கு பாதயாத்திரை சென்ற பக்தர் உயிரிழப்பு

நாமக்கல் அருகே பழனிக்கு பாதயாத்திரை சென்ற பக்தர் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் பங்குனி உத்திரம், தைப்பூசம் உள்ளிட்ட விசேஷத்தை முன்னிட்டு பல பக்தர்கள் பாதயாத்திரையாக பழனி மலைக்கோயிலுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த வகையில் பல குழுக்களாக பாதயாத்திரை பயணமாக நடந்து செல்வர். பகல் முழுவதும் நடந்து விட்டு இரவில் கிடைக்கும் இடங்களில் ஒய்வு எடுத்து விட்டு மறுநாள் பாதயாத்திரையை துவக்குவது வழக்கம். நாமக்கல் மாவட்டம், […]

பிளாஸ்டிக் ஒழிப்பதற்கு வித்தியாசமான முறையில் யோசித்த தனியார் அறக்கட்டளை

பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை மாணவர்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் உருவாக்கும் விதமாக திருச்செங்கோட்டில் இயங்கி வரும் நம்ம திருச்செங்கோடு அறக்கட்டளை சார்பாக “அதிகப்படியான பிளாஸ்டிக் பொருட்களை ஒரு பாட்டிலில் அடைத்து தருபவர்களை பாராட்டி மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சி” திருச்செங்கோட்டில் உள்ள அறக்கட்டளை அலுவலகத்தில் நடந்தது. அழிக்க முடியாத ஆனால் மனித குலத்துக்கு அழிவை உருவாக்கக்கூடிய ஒரு பொருளாக இருந்து வருகிற பிளாஸ்டிக்கை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்த போதிலும், ஆங்காங்கே பொதுமக்கள் சுய விழிப்புணர்வு […]

ஆங்கில புத்தாண்டை கேக் வெட்டி கொண்டாடிய குஜராத் எம்.பி

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்தை குஜராத் மாநிலங்களவை பெண் உறுப்பினர் ரமீலா பென் பாரா துவக்கி வைத்தார். மேலும் ஆங்கில புத்தாண்டினை கேக் வெட்டி கொண்டாடினர். மத்திய அரசு விஸ்வகர்மா என்ற திட்டத்தின் மூலம் சிறுகுரு தொழில்களை ஊக்குவிக்கவும், குல தொழிலை வளர்க்கவும் விஸ்வகர்மா என்னும் திட்டத்தை அறிமுகப்படுத்தி, அதன் மூலம் கடன் உதவி வழங்கி வருகிறது. இந்தத் திட்டம் தமிழ்நாட்டில் தற்போது நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ள சூழ்நிலையில், கிராமப் பகுதிகளிலும் விஸ்வகர்மா […]

ஜொலி ஜொலிக்கும் தங்க கவசத்தில் நாமக்கல் ஆஞ்சேநேயர், முனீஸ்வரர்

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நாமக்கல் அருள்மிகு ஆஞ்சநேயர் சுவாமி மற்றும் கோட்டை முனீஸ்வரர் சாமி தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர். நாமக்கல் நகரின் மையப்பகுதியில் 18 அடி உயரத்தில் கம்பீரமாக காட்சி அளிக்கும் ஆஞ்சநேயர் சுவாமி வழிபாடு செய்ய பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதன்ஒருபகுதியாக, ஆங்கில புத்தாண்டை ஒட்டி நாமக்கல் அருள்மிகு ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதிகாலையில் […]

ஆங்கில புத்தாண்டு 7 டன் மலர்களை கொண்டு ஆஞ்சநேயருக்கு புஷ்பாஞ்சலி

உலகப்புகழ் பெற்ற நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமிக்கு ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு, 7 டன் மலர்களால், புஷ்பாஞ்சலி நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நாமக்கல் நகரின் மையமான, கோட்டை பகுதியில், ஸ்ரீ நரசிம்ம சுவாமி மற்றும் நாமகிரித்தாயார் கோயில் எதிரில் ஒரே கல்லினால் 18அடி உயரத்தில் உருவான ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. இங்கு வணங்கிய நிலையில் ஸ்ரீ ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். தினசரி காலையில் ஆஞ்சநேயருக்கு 1,008 […]