...
May 2, 2024

சத்துணவு சமையல் பணியாளரை கொலை செய்த பெண் கைது

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் கந்து வட்டி கடனை அடைக்க தன்னுடன் பணிபுரிந்த சத்துணவு சமையல் பணியாளரை கொலை செய்த பெண் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள புத்தர் பகுதியில் செயல்படும் நகராட்சி துவக்க பள்ளியில், தமிழக அரசின் புதிய திட்டமான காலை சிற்றுண்டி தயாரிக்கும் உணவகத்தில், தெற்கு காலனி பகுதியைச் சேர்ந்த கௌரிகாஞ்சனா என்ற பெண்மணியும், தம்மன்ன செட்டியார் வீதி பகுதியைச் சேர்ந்த மாதேஸ்வரி என்ற பெண்ணும் சமையலராக பணிபுரிந்து வந்தனர். […]

நாமக்கல் ஆயுதப்படை பெண் காவலர் விஷம் குடித்து தற்கொலை நாமக்கல் போலீசார் விசாரணை.

நாமக்கல் ஆயுதப்படை பெண் காவலர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட நிலையில் நாமக்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் ஆர்.என்.பாளையத்தை சேர்ந்தவர் வைஷ்ணவி (33), இவர் நாமக்கல் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணம் ஆகி முதல் கணவர் விவாகரத்து ஆன நிலையில் ஈரோட்டில் பணிபுரிந்த போது உடன் பணிபுரிந்த காவலர் சேகர் என்பவரை 2 வதாக திருமணம் செய்து கொண்டார். சேகர் தற்போது நீலகிரி மாவட்டத்தில் பணிபுரிந்து வருகின்றார். […]

திருச்செங்கோட்டில் டெங்கு கொசுக்கள் ஒழிப்பு பணிகள் தீவிரம்

திருச்செங்கோடு நகராட்சியில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு கலந்து கொண்டு டெங்கு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.‌ டெங்கு காய்ச்சல் உருவாக்கும் ஏடீஸ் வகையான கொசுக்கள் கடிப்பதால் டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது. டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் கொசுக்களை அழிக்கும் பணியில் மாநில அரசு சார்பில் ஒவ்வொரு நகராட்சி, ஊராட்சி நிர்வாகம் சார்பில் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சிக்கு உட்பட்ட 14வது […]

ராசிபுரத்தில் கேப்டன் விஜயகாந்த் உயிரிழந்த செய்தி கேட்டு தேமுதிக நிர்வாகி மரணம்

தேமுதிக தலைவரும்,நடிகருமான விஜயகாந்த் உயிரிழந்த செய்தியை தாங்க முடியாமல் ராசிபுரம் அருகே கட்சி நிர்வாகி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேமுதிக கட்சியின் நிறுவனத் தலைவரும் நடிகருமான விஜயகாந்த் நேற்று காலையில் உடல்நலக் குறைவால் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழக முழுவதும் கட்சி நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் என ஏராளமான அவரது இறப்பிற்கு அஞ்சலி செலுத்தினர். திருவுருவ படத்திற்கு மரியாதை இந்த நிலையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டை பகுதியில் தேமுதிக கட்சி நிர்வாகிகள் […]

“மக்களுடன் முதல்வர்” திட்டத்தில் 4 ஆயிரம் மனுக்களுக்கு நடவடிக்கை

”மக்களுடன் முதல்வர்” திட்ட முகாம்களில் பெறப்பட்ட சுமார் 4,000-க்கும் மேற்பட்ட மனுக்கள் மீது உடனடி தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் தெரிவித்தார்.நாமக்கல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மோகனூர் பேரூராட்சி, முத்துராஜா தெரு, மாசடச்சியம்மன் திருமண மண்டபத்தில் நடைபெற்று வரும் ”மக்களுடன் முதல்வர்” திட்ட முகாமினை பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் பார்வையிட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா,  தலைமையில், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.ராமலிங்கம் அவர்கள் ஆகியோர் முன்னிலையில் ஆய்வு […]

சிறுதானியங்கள் சாகுபடியில் நாமக்கல் மாவட்டம் சாதனை

நாமக்கல் மாவட்டத்தில், 2023 -ஆண்டு 79,327 எக்டர் சிறுதானியங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் தெரிவித்தார். நாமக்கல் மாவட்டம், நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அரசினர் மகளிர் கலை கல்லூரியில், உணவு பாதுகாப்புத்துறையின் சார்பில், இன்று (29.12.2023) சிறுதானிய உணவு விழிப்புணர்வு திருவிழாவை முன்னிட்டு, சிறுதானிய பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது. இதில் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், மாவட்ட ஆட்சியர் உமா, நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.ராமலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு கண்காட்சியை பார்வையிட்டனர். இதன் பின்னர் […]

வசந்தபுரத்தில் அரசு சார்பில் கட்டப்படும் பிரமாண்டமான கட்டிடம் எதற்கு என தெரியுமா

நாமக்கல்லில் சுமார் 6.60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமையவுள்ள புதிய ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என். ராஜேஸ்குமார் அவர்கள் அடிக்கல் நாட்டினார். புதிய ஒழுங்குமுறை விற்பனை கூடம் நாமக்கல் மாவட்டம், நாமக்கல் ஊராட்சி ஒன்றியம், வசந்தபுரம் ஊராட்சியில் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் இன்று (29.12.2023) வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண்மை வணிகத்துறை சார்பில், ரூ.6.60 கோடி மதிப்பீட்டில் புதிய நாமக்கல் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைக்கும் பணிக்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் […]

நாமக்கல்லில் சிறுதானிய உணவுகள் விழிப்புணர்வு பேரணி

நாமக்கல்லில் சிறுதானிய உணவு விழிப்புணர்வு பேரணியை எம்பி ராஜேஷ்குமார் துவக்கி வைத்தார். சிறுதானியத்தில் உள்ள நன்மைகள் குறித்தும் அதில் உள்ள சத்துக்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழக அரசு சார்பில் சர்வதேச சிறுதானிய ஆண்டு கொண்டாடப்படுகிறது. அதன்படி, நாமக்கல்லில் உள்ள கவிஞர் ராமலிங்கம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாமக்கல் உணவுப் பாதுகாப்பு துறை சார்பில் “சர்வதேச சிறுதானிய உணவுகள் விழிப்புணர்வு பேரணி” நடைபெற்றது. /*! elementor – v3.18.0 – 20-12-2023 */ .elementor-widget-image{text-align:center}.elementor-widget-image […]

நாமக்கல்லில் பயிற்சி பெற்ற மாணவியர் வெங்கல பதக்கம்

நாமக்கல்லில் பயிற்சி பெற்ற மாணவியர் அணி தேசிய வாலிபால் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றனர்.  ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் பள்ளி மாணவ மாணவியருக்கான 67வது “தேசிய வாலிபால் சாம்பியன்ஷிப்” போட்டிகள் நடைபெற்றது. இப் போட்டியில் கலந்து கொண்ட 14 வயதிற்குட்பட்ட தமிழக மாணவியர் அணி பஞ்சாப் அணியை வீழ்த்தி வெண்கல பதக்கம் வென்றது. தமிழக அணிக்கான தேர்வு மற்றும் பயிற்சி முகாம் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் RN ஆக்ஸ்போர்டு பள்ளியில் நடைபெற்றது. இந்த முகாமில் தமிழகம் […]

இந்திய ராணுவத்தில் வேலைவாய்ப்பு

இந்திய இராணுவத்தில் அக்னிவீர் படைபிரிவில் சேருவதற்கான உடற்தகுதி தேர்வு கடலூர் மாவட்டத்தில் நடைபெற உள்ளதாக ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய இராணுவத்தில் அக்னிவீர் படைபிரிவில் சேருவதற்கான அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது. இத்தேர்விற்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு உடல் தகுதித்தேர்வு கடலூரில் உள்ள அண்ணா விளையாட்டரங்கில் வரும் ஜனவரி 4-ம் தேதி தொடங்கி 13-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. /*! elementor – v3.18.0 – 20-12-2023 */ .elementor-widget-image{text-align:center}.elementor-widget-image a{display:inline-block}.elementor-widget-image […]

Seraphinite AcceleratorBannerText_Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.