...
April 23, 2024
#சற்றுமுன் #செய்திகள்

நாமக்கல்லில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் வருமான துறையினர் சோதனை

நாமக்கல்லில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் வருமான துறையினர் சோதனை

நாமக்கல்லை சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவர் சத்தியமூர்த்தி & கோ என்ற பெயரில் நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார்.

இவர் அரசு மருத்துவக் கல்லூரி, தமிழக அரசின் குடிநீர் திட்டங்கள், குடிசை மாற்று வாரியம் குடியிருப்புகள் உள்ளிட்ட அரசு பணிகளை ஒப்பந்தம் எடுத்து எடுத்து பல ஆண்டுகளாக கட்டுமான பணிகளை செய்து வருகிறார். நாமக்கல்லில் தற்போது புதிதாக பயன்பாட்டிற்கு வந்த அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை சத்திய மூர்த்தி & கோ நிறுவனம் தான் கட்டுமான பணிகளை மேற்கொண்டது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பில் இந் நிறுவனத்தின் மூலம் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சத்தியமூர்த்தி வசித்து வரும் நாமக்கல் அழகு நகரில் உள்ள அவரது வீடு, முல்லை நகரில் உள்ள அவரது அலுவலகத்தில் காலை 11 மணி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சி.ஆர்.பி.எப் காவல் துறையினரை பாதுகாப்புடன் கோவை, மதுரை, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனையின் முடிவில் தான் ஆவணங்கள் மற்றும் ரொக்கங்கள் பறிமுதல் செய்யப்பட்டதா என்பது தெரியவரும்.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ததாக, தமிழகம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட, ரியல் எஸ்டேட் மற்றும் சிவில் காண்ட்ராக்டர்களின் அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நாமக்கல்லைச் சேர்ந்த காண்ட்ராக்டர் சத்தியமூர்த்தியின் நிறுவனங்களிலும், வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது. நாமக்கல்லில் நடைபெறும் வருமான வரித்துறை சோதனையால் தொழில் அதிபர்கள் இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

இதையும் படிங்க : நாமக்கல்லில் சிறுமிக்கு சூடு வைத்ததாக புகார் 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Seraphinite AcceleratorBannerText_Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.