...
April 25, 2024
#க்ரைம்

ஆன்லைன் ரம்மியால் ஏற்பட்ட கடன் : கடனை அடைக்க வயதான தம்பதியனரை கொலை கொள்ளை அரங்கேற்றம்

ஆன்லைன் ரம்மியால் ஏற்பட்ட கடன்: வயதான தம்பதியனர் அடித்து கொலை செய்த நாமக்கல் தீயணைப்பு வீரர் இரண்டு மாதங்களுக்கு பிறகு போலீசில் சிக்கினார்.

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அடுத்த குப்புச்சிப்பாளையம் அருகே குச்சிக்காடு தோட்டத்தை சேர்ந்த ஒய்வு பெற்ற கூட்டுறவு சர்க்கரை ஆலை ஊழியர் சண்முகம் இவரது மனைவி நல்லம்மாள் (எ) சின்னப்பிள்ளை தம்பதியினர். இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ள நிலையில், அவர்கள் அனைவருக்கும் திருமணமாகி வெவ்வேறு ஊர்களில் வசித்து வருகின்றனர். வீட்டில் வயதான தம்பதியனரான சண்முகம் – நல்லம்மாள் மட்டுமே தனியாக வசித்து வந்தனர்.

கொடூரமான முறையில் கொலை

இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதம் 11-ம் தேதி நள்ளிரவில் சண்முகம் – நல்லம்மாள் வீட்டிற்கு மர்ம நபர் ஒருவர் சென்று கடப்பாரையால் தூங்கி கொண்டிருந்த வயதான தம்பதியனரை தலையில் கொடூரமான முறையில் தாக்கி நல்லம்மாள் அணிந்திருந்த 8 பவுன் தங்க தாலி சங்கிலியை திருடி சென்றுள்ளனர்.
காலையில் நீண்ட நேரம் வயதான தம்பதியனர் வீட்டை விட்டு வராததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டை திறந்து பார்த்த போது ரத்த வெள்ளத்தில் சண்முகமும் அவரது மனைவி நல்லம்மாள் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

போலீசில் புகார்

இதனையடுத்து பரமத்தி வேலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பரமத்தி வேலூர் போலீசார் இருவரையும் மீட்டு பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் நல்லம்மாள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகவும் சண்முகத்திற்கு தலைமையில் படுகாயம் ஏற்பட்டு சுயநினைவு இல்லாமல் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து சண்முகம் நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பின் மேல்சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சண்முகம் பரிதாபமாக உயிரிழந்தார்.

போலீசாரின் விசாரணை

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த பரமத்தி வேலூர் போலீசார் விசாரணையை தொடங்கினர். சம்பவ இடத்தில் நாமக்கல் எஸ்பி ராஜேஷ்கண்ணா ஆய்வு மேற்கொண்டார். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டும் தடயவியல் நிபுணர்களும் ஆய்வு செய்தனர். அப்போது சம்பவ இடத்தில் இருந்து மிளகாய் பொடி கொண்ட பை ஒன்று கைப்பற்றப்பட்டது. இருப்பினும் குற்றவாளி யார் என்பதை போலீசாரால் கண்டறிய முடியவில்லை. அண்டை வீடுகளிலும் விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கு விசாரணை 2 மாதங்களாக போலீசாரின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது. குப்புச்சிபாளையம், பரமத்தி வேலூர், வேலாயுதம்பாளையம், கரூர் என 4 தனிப்படைகள் அமைத்து போலீசாரின் தேடுதல் வேட்டை நீண்டு கொண்டே இருந்தது.

நம்பிக்கை கொடுத்த சிசிடிவி

இந்த சூழலில் அண்டை வீட்டை சேர்ந்த ஜனார்த்தனனின் நடவடிக்கையின் மீது போலீசார் சந்தேகமடைந்தனர். இதனால் சம்பவ நடந்த அன்று சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போது அதில் எதுவும் சிக்கவில்லை. இதனால் சம்பவ நாளுக்கு முன்னர் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போது சில நாட்களுக்கு முன்னர் அண்டை வீட்டை சேர்ந்த ஜனார்த்தனன் வயதான தம்பதியனர் வீட்டிற்கு அடிக்கடி சென்று வருவதும் தெரிய வந்தது

ஆன்லைன் ரம்மியால் ஏற்பட்ட கடன் : கடனை அடைக்க வயதான தம்பதியனரை கொலை கொள்ளை அரங்கேற்றம்

சிக்கிய கொலையாளி

அதனையடுத்து ஜனார்த்தனனை பிடித்து விசாரணை செய்ததில் அவர் தான் இந்த கொடூர கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதன் பின்னர் போலீசாரிடம் ஜனார்த்தனன் அளித்த வாக்குமூலத்தில், ” தான் நாமக்கல் தீயணைப்பு மீட்புப் படையில் பணிபுரிந்து வந்ததாகவும் தனக்கு ஆன்லைன் ரம்மி விளையாடும் பழக்கம் இருந்தால் அதில் 30 லட்சம் வரை இழந்ததாகவும் மேலும் அதில் விளையாடும் மோகம் குறையவில்லை எனவும் அதனால் பணத்தேவை ஏற்பட்ட போது சண்முகம் வீட்டிற்கு நள்ளிரவில் சென்று திருடுவதற்காக நோட்டமிட்டதாகவும் தெரிவித்தார்.

கொலையாளியின் தந்திரம்

தொடர்ந்து கூறிய அவர், இம்முறை சிசிடிவி கேமராவில் சிக்காமல் மிளகாய் பொடி, கையுறை மற்றும் முகமூடி ஆகியவற்றை கொண்டு கடந்த அக்டோபர் 11-ம் தேதி நள்ளிரவில் சண்முகம் வீட்டிற்கு சென்றதாகவும் அங்கு திருட முற்பட்ட போது மூதாட்டி நல்லம்மாள் தன்னை பார்த்து விட்டதாகவும் இதனால் அருகில் இருந்த கடப்பாரையை எடுத்து நல்லம்மாளின் தலையில் பலமாக தாக்கி கொலை செய்ததாகவும் நல்லம்மாளின் அலறல் சத்தத்தை கேட்டு பதறி அடித்து கொண்டு வந்த சண்முகத்தை தாக்கியதாகவும் அதன்பின் நல்லம்மாள் அணிந்திருந்த 8 பவுன் தங்க தாலி சங்கிலியை மட்டும் எடுத்துக் கொண்டு அந்த இடம் முழுவதும் மிளகாய் பொடியை தூவி விட்டு கடப்பாரையை அருகில் இருந்த கிணற்றில் போட்டு விட்டதாகவும் தெரிவித்தார். மேலும் இறுதி நேரத்தில் சண்முகம் உயிர் இருந்ததால் தான் மாட்டி கொள்வோம் என அச்சத்தில் இருந்ததாகவும் ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் நிம்மதியடைந்து வழக்கம் போல பணிக்கு சென்றதாக போலீசாரிடம் ஜனார்த்தனன் வாக்குமூலம் அளித்தார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு ஜனார்த்தனனை அழைத்து சென்ற போலீசார் கொலைக்கு பயன்படுத்திய கடப்பாரையை மீட்டு ஜனார்த்தனனை நீதிமன்றத்தில் ஆஜர் செய்து பின்னர் சிறையில் அடைத்தனர்.

ஆன்லைன் ரம்மியால் ஏற்பட்ட கடனை அடைக்க தீயணைப்பு வீரர் வயதான தம்பதியனரை அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: (27.12.23) நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை நிலவரங்கள்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Seraphinite AcceleratorBannerText_Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.