...
April 29, 2024
#செய்திகள்

நாமக்கல்லில் அதிமுக வேட்பாளர் பாட்டு பாடி வாக்கு சேகரிப்பு

நாமக்கல்லில் அதிமுக வேட்பாளர் பாட்டு பாடி வாக்கு சேகரிப்பு :

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் தமிழ்மணி என்பவர் போட்டியிடுகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தீர்த்த குட ஊர்வலத்துடன் சென்றவர்களுடன் நடனமாடி வாக்கு சேகரித்தார்.

இந்நிலையில் நாமக்கல் ஒன்றியத்திற்கு உட்பட்ட சிங்கிலிப்பட்டி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் அங்கிருந்த மூதாட்டிகளை பாடல் பாட சொல்லி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதேபோல் மூதாட்டிகளும் பாடல்களை பாடினார். அதேபோல் அதிமுக வேட்பாளர் தமிழ்மணியும் எம்.ஜி.ஆரின் சினிமா பாடல்களை பாடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதனை அப்பகுதி பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

Seraphinite AcceleratorBannerText_Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.