...
April 24, 2024
#சற்றுமுன்

அமலுக்கு வந்தது தேர்தல் நடத்தை விதிமுறைகள் : 4 லட்சம் ரூபாய் பறிமுதல்

அமலுக்கு வந்தது தேர்தல் நடத்தை விதிமுறைகள் : 4 லட்சம் ரூபாய் பறிமுதல்

நாமக்கல்லில் 4 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல்‌ செய்யப்பட்டது. மாவட்டத்தில் 68 பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளதாக நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா தெரிவித்தார்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று அனைத்து கட்சி பிரதிநிதிகளுடனான தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து அரசியல் கட்சியினருடன் மாவட்ட ஆட்சியர் உமா மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர்.

இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் உமா, .நாமக்கல் பாராளுமன்றத் தொகுதியில் சங்ககிரி, இராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், பரமத்திவேலூர் மற்றும் திருச்செங்கோடு ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இவற்றில் 7,04,270 ஆண்கள், 7,39,610 பெண்கள் மற்றும் 156 இதர பிரிவினர் ஆக மொத்தம் 14,44,036 வாக்காளர்கள் உள்ளனர். 68 பதட்டமான வாக்குசாவடிகள் கண்டறியப்பட்டுள்ளது. 1660 வாக்குச்சாவடிகள் தேர்தலுக்காக தயார் நிலையில் உள்ளன.

சமூக வலைதளங்களில் தேர்தல் தொடர்பாக தங்களுக்கு தெரியாத தகவல்களை பரப்பினால் பிணையில் வராத பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சேந்தமங்கலம் அருகே உள்ள கல்குறிச்சி கிராமத்தில் முட்டை வியாபாரி ஒருவர் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து சென்ற 4 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆவணங்கள் முறையாக சமர்ப்பித்தால் பணம் திருப்பி வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், அரசு மற்றும் பொது இடங்களில் உள்ள அரசியல் விளம்பரங்கள் 72 மணி நேரத்தில் அழிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பதட்டமான வாக்கு சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளது. பறக்கும் படைகள் மூலம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறோம். தேர்தல் தொடர்பாக இது வரை 3 புகார் வந்ததன் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்கு 25 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட எல்லைகளில் 10 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக ஆட்சியர் உமா தெரிவித்தார்.

Seraphinite AcceleratorBannerText_Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.