...
April 18, 2024
#செய்திகள்

நாமக்கல்லில் டாக்டர் பாரிவேந்தருக்கு உற்சாக வரவேற்பு

நாமக்கல்லில் டாக்டர் பாரிவேந்தருக்கு உற்சாக வரவேற்பு

நாமக்கல்லில் நடைபெறும் தொழில் கண்காட்சி துவக்கி வைக்க நாமக்கல் வருகை தந்த டாக்டர் பாரிவேந்தர் அவர்களுக்கு இந்திய ஜனநாயக கட்சியின் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

நாமக்கல் பொம்மைகுட்டை மேட்டில் இன்றும், 6 7 ஆகிய தேதிகளில் மாபெரும் தொழில் கண்காட்சி நடைபெறுகிறது. இதனை டாக்டர் பாரிவேந்தர் எம் பி அவர்கள் துவக்கி வைத்தார். இதற்காக நாமக்கல் வருகை தந்த டாக்டர் பாரிவேந்தர் எம்பி அவர்களுக்கு நாமக்கல் இந்திய ஜனநாயக கட்சி சார்பில் உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

முன்னதாக பொன்நகர், பகுதியில் அமைக்கப்பட்டிருந்த இந்திய ஜனநாயக கட்சியின் கொடியினை டாக்டர் பாரிவேந்தர் எம்.பி அவர்கள் ஏற்றி வைத்தார். இதன்பின் ஏராளமான இந்திய ஜனநாயக கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் இளைஞர்கள் பொன்நகரில் இருந்து பொம்மைகுட்டைமேடு வரை இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் பேரணியாகச் சென்றனர்.

இந்த ஏற்பாடுகளை இந்திய ஜனநாயக கட்சியின் மாநில துணைத்தலைவர் தங்கவேல், மாநில துணை பொதுச்செயலாளர் தனசேகரன் ஆகியோர் செய்திருந்தனர். இதில் மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க ; “நெகிழி இல்லா நாமக்கல்” உருவாகிட மாவட்ட நிர்வாகத்தோடு இணைந்து செயல்பட வேண்டுகோள்..!

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Seraphinite AcceleratorBannerText_Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.