...
April 25, 2024
#செய்திகள்

சாலப்பாளையத்தில் வருகின்ற 18-ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி

Coming 18th Jallikattu Competition at Chalapalayam:

நாமக்கல் மாவட்டம் சாலப்பாளையத்தில் வருகின்ற 18-ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழர்களின் வீர விளையாட்டாக ஜல்லிக்கட்டு உள்ளது. ஒவ்வொரு ஆண்டு ஜனவரி மாதம் முதல் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த வாரம் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.

இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் பொட்டிரெட்டிப்பட்டி, அலங்காநத்தம், சேந்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் வழக்கமாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதி வழங்கப்படாமல் இருந்தது. மேலும் நாமக்கல் மாவட்டம் சாலப்பாளையத்தில் புதிதாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.

இந்த சூழலில், சாலப்பாளையத்தில் ஜல்லிக்கட்டு விழா குழுவினர் சார்பில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தேவையான முன்னேற்பாடுகளை செய்து வந்தனர். இந்த நிலையில் இன்று மாவட்ட நிர்வாகம் சார்பில் விழா குழுவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அந்த பேச்சுவார்த்தையில் வருகின்ற 18-ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, சாலபாளையம் ஜல்லிக்கட்டு விழா குழுவின் தலைவர் ராஜா கூறுகையில், சாலப்பாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வேண்டும் என கடந்த 3 ஆண்டுகளாக கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதன்படி, இந்தாண்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்திட மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இதற்கு அனுமதி வழங்கிய மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், வருவாய் கோட்டாட்சியர் உட்பட அனைத்து அரசுத்துறை அதிகாரிகளுக்கும் மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமாருக்கும் நன்றி தெரிவித்தார். தொடர்ந்து கூறிய அவர், சாலப்பாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு எவ்வித அரசியல் மற்றும் சாதிய பாகுபாடுகள் இன்றி நேர்மையான முறையில் நடத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

நாமக்கல் மாவட்டத்தில் இந்தாண்டு இரண்டாவது ஜல்லிக்கட்டு போட்டியாக சாலப்பாளையத்தில் நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க :திருச்செங்கோட்டில் ஒரேநாளில் 8 பேரை கடித்து குதறிய வெறி நாய்..!
Seraphinite AcceleratorBannerText_Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.