...
April 22, 2024
#செய்திகள்

தொழிலாளர்களைத் தேடி மருத்துவம் திட்டம் மாவட்டம் முழுவதும் விரிவுப்படுத்தப்படும் – ஆட்சியர் உமா

தொழிலாளர்களைத் தேடி மருத்துவம் திட்டம் நாமக்கல் மாவட்டம் முழுவதும் விரிவுப்படுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார்

தொழிலாளர்களைத் தேடி மருத்துவம் திட்டம் நாமக்கல் மாவட்டம் முழுவதும் விரிவுப்படுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம், மோகனூர், சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இன்று  (09.01.2024) தொழிலாளர்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ், தொற்றாநோய்களுக்கான பணியிடம் சார்ந்த பரிசோதனை முகாம் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் உமா பார்வையிட்டார்.

”தொழிலாளர்களை தேடி மருத்துவம்”  திட்டத்தின் கீழ், மோகனூர், சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பணிபுரியும் 300 பணியாளர்களுக்கு தொற்றா நோய்களுக்கான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இம்முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் உமா, பேசுகையில், தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் ஆரோக்கித்தை கருத்தில் கொண்டு மக்களைத்தேடி மருத்துவம், வருமுன் காப்போம் திட்டம், இன்னுயிர் காப்போம் – நம்மை காக்கும் 48 உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார். அதனடிப்படையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள 32 லட்சம் தொழிலாளர்களின் நலனை பாதுகாத்திடும் வகையில், தொழிலாளர்களை தேடி மருத்துவம் திட்டத்தினை செயல்படுத்த தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், துணிநூல் மற்றும் கைத்தறி துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்கள் ஆகியோர் இன்று (09.01.2024) திருவள்ளுர் மாவட்டத்தில் தொடங்கி வைத்து, வழிகாட்டி கையேட்டினை வெளியிட்டனர்.

”தொழிலாளர்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் ஏராளமானோர் பயன்”

மக்களைத் தேடி மருத்துவம் திட்டம், தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களும் பயனடையும் வகையில் ”தொழிலாளர்களை தேடி மருத்துவம்” திட்டம் விரிவுப்படுத்தப்பட்டு, தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. ”நாமக்கல் மாவட்டத்தில் மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் 13,66,452 நபர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு, 3,09,299 நபர்கள் தொடர் சிகிச்சையின் மூலம் பயனடைந்து வருகின்றனர்.

இந்தியாவில் தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு முன்னிலை மாநிலமாக திகழ்ந்து வருகிறது. மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமாக விளங்கும் தொழிலாளர்களின் நலனில் தனி அக்கறை கொண்டு தொழிற்சாலைகளிலும், கட்டுமானம் உள்ளிட்ட அமைப்புசாரா தொழில்களிலும் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் தொற்றாநோய்களுக்கான பணியிடம் சார்ந்த பரிசோதனை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக ரூ.43.89 இலட்சம் மதிப்பீட்டில் 38 மாவட்டங்களில் உள்ள 711 தொழிற்சாலைகளில் பணிபுரியும் 8,53,000 பணியாளர்களுக்கு மக்களை தேடி மருத்துவம் திட்டம் விரிவுப்படுத்தப்படவுள்ளது.

தொழிலாளர்களைத் தேடி மருத்துவம் திட்டம் நாமக்கல் மாவட்டம் முழுவதும் விரிவுப்படுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார்

“ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்”

இன்றைய வாழ்க்கை சூழ்நிலையில் தொற்றா நோய்களான சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்கள் அதிகளவில் கண்டறியப்பட்டுள்ளது. நாம் எடுத்துக்கொள்ளும் உணவு முறை மற்றும் சரியான உடற்பயிற்சி மேற்கொள்ளாத காரணங்களினால் தொற்றா நோய்கள் அதிகளவில் ஏற்பட்டுள்ளது. இதனால் சிறுநீரகம் பாதிப்பு, நரம்பு மண்டலம் பாதிப்பு, கண்பார்வை குறைபாடு, இதய நோய் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. முறையாக இரத்த அழுத்த பரிசோதனை மற்றும் இரத்தத்தில் சர்க்கரை அளவை பரிசோதித்து சிகிச்சை மேற்கொண்டு வந்தால் மேற்கண்ட பாதிப்புகளிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ள முடியும். தமிழ்நாடு அரசின் உறுப்பு மாற்று திட்டத்தின் கீழ், 6,700 நபர்கள் மாற்று சிறுநீரகம் வேண்டி பதிவு செய்துள்ளார்கள். இந்தியாவில் தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு முன்னிலை மாநிலமாக திகழ்ந்து வருகிறது. எனவே, உங்கள் ஆரோக்கியத்தில் நீங்கள் அதிக கவனம் செலுத்திட வேண்டும்.

இன்றைய தினம் மோகனூர், சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பணிபுரியும் பணியாளர்களுக்கு தொற்றா நோய்களுக்கான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. உங்களுக்கு நோய் கண்டறியப்பட்டால் கட்டாயம் தொடர்ந்து மருந்துகள் எடுத்து கொண்டு, தொடர் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். எனவே, நீங்கள் அனைவரும் கட்டாயம் இந்த முகாமை பயன்படுத்தி கொண்டு உங்களையும், உங்களது குடும்பத்தையும் ஆரோக்கியமாக வைத்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

இம்முகாமில் துணை இயக்குநர் சுகாதார பணிகள் மருத்துவர்.க.பூங்கொடி, சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண் இயக்குநர் மல்லிகா, உட்பட துறை சார்ந்த அலுவலர்கள், தொழிலாளர் பெருமக்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க ; உலக முதலீட்டாளர்கள் மாநாடு – 2024 : நாமக்கல் மாவட்டத்திற்கு குவியும் முதலீடுகள்..!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Seraphinite AcceleratorBannerText_Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.