...
April 22, 2024
#வேலைவாய்ப்பு

நீங்களும் ஒரு தொழில் முனைவோர் ஆகலாம்

தமிழ்நாடு அரசு வாழ்ந்து காட்டுவோம் திட்டம், நாமக்கல் மாவட்டத்தில் புதுச்சத்திரம், மோகனூர், திருச்செங்கோடு மற்றும் பள்ளிபாளையம் ஆகிய நான்கு வட்டாரங்களை உள்ளடக்கிய 87 ஊராட்சிகளில் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் ஒரு பகுதியான இணை மானியத்திட்டத்தின் மூலம் மகளிர் தொழில் முனைவோர்கள், மகளிர் குழு உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் வங்கி மூலம் மானியத்துடன் கூடிய கடன் பெற்று தொழிலை மேற்கொள்ளலாம்.

இந்த இணை மானியத்திட்டத்தில் குறைந்த பட்சம் ரூ.1 இலட்சம் முதல் அதிகபட்சம் ரூ.2.5 கோடி வரை கடன்பெறலாம். மேலும் பெறக்கூடிய கடனில் 30 சதவீதம் மானியம் ஆகும். (அதிகப்பட்சமாக ரூ.40 இலட்சம் வரை மானியமாக பெறமுடியும்). வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் திட்ட செயல்பாடுகள் மற்றும் ஊரக பகுதிகளில் உள்ள தொழில் முனைவோர்களுக்கு சுய தொழில் புரிவதற்கான அரசின் சான்றிதழ்கள் பெறுதல் (உதாரணம் MSME/ FSSAI/ Others) தொழில் தொடங்க தேவையான நிதி வசதிகளை வங்கிகள் மூலம் பெற்று தருதல், வணிக திட்டம் தயாரித்தல், அரசின் இதர துறைகளில் இருந்து கிடைக்க கூடிய கடன்களை தொழில் முனைவோர்களுக்கு பெற்று தருதல் போன்ற தொழில் மேம்பாடு தொடர்பான சேவைகளை இத்திட்டத்தின் மூலம் துவக்கப்பட்டுள்ள மதி சிறகுகள் தொழில் மையமானது செய்து வருகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் உள்ள தொழில் முனைவோர்கள், வணிக நண்பர்கள் புதிதாக தொழில் தொடங்க, தொழிலை விரிவாக்கம் செய்திட வங்கிக்கடன் பெறுபவர்கள் என அனைவரும் பயன்பெறலாம்.

வணிகம் சார்ந்த அரசின் இதர துறைகளிலிருந்து கிடைக்கக்கூடிய மானியக்கடன் மற்றும் மானியம் இல்லாக்கடன், அரசின் சான்றிதழ்கள் பெறுதல் போன்ற அனைத்து சேவைகளுக்கும் கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு உரிய சேவைகளை குறைந்த கட்டணத்தில் பெற்றிட முடியும்.

“மதி சிறகுகள் தொழில் மையமானது” நாமக்கல் மாவட்டத்தில்

நாமக்கல் தாலுக்கா அலுவலக எதிரில் உள்ள பூமாலை வணிக வளாக கட்டிடத்தில் உள்ள அலுவலகத்திலும் (தொலைபேசி எண். 04286-293731/7402639250) மற்றும் திருச்செங்கோடு வட்டாரம், தோக்கவாடி ஊராட்சியில் உள்ள வட்டார சேவை மைய கட்டிடத்திலும் (தொலைபேசி எண். 04288-259250/9965609149) செயல்பட்டு வருகிறது.

உரிய சான்றிதழ்கள் பெறவிரும்பும் தொழில் முனைவோர்கள் மற்றும் வணிக நண்பர்களுக்கே அந்தந்த ஊராட்சிகளுக்கே சென்று அவர்களுக்கான உரிய சேவைகளை குறைந்த கட்டணத்தில் இவ்விரண்டு மையப்பணியாளர்கள் பெற்றுத்தருவார்கள் என மாவட்ட ஆட்சியர் உமா அவர்கள் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:ஆடுகள் வளர்ப்பில் கொழிக்கும் லாபம்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Seraphinite AcceleratorBannerText_Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.