...
April 23, 2024
#வேலைவாய்ப்பு

ஆடுகள் வளர்ப்பில் கொழிக்கும் லாபம்

அறிவியல் ரீதியிலான மேலாண்மை உத்திகளை பயன்படுத்தி சேலம் கருப்பு இன வெள்ளாடுகளின் மூலம் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குதல்

நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் கால்நடைப் பண்ணை வளாகத்தில் ஜனவரி மாதம் 05.01.2024 வெள்ளிக்கிழமை அன்று “அறிவியல் ரீதியிலான மேலாண்மை உத்திகளை பயன்படுத்தி சேலம் கருப்பு இன வெள்ளாடுகளின் மூலம் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குதல் குறித்த மாநில அளவிலான விழிப்புணர்வு மற்றும் பயிற்சிப் பட்டறை நடைபெற உள்ளது.

பயிற்சியின் முக்கியத்துவம்

இப்பயிற்சிப் பட்டறையில் தமிழ்நாட்டு வெள்ளாட்டு இனங்கள் குறிப்பாக சேலம் கருப்பு இன ஆடுகளின் குணாதிசியங்கள். ஆடுகளின் உற்பத்தி திறனை அதிகப்படுத்தும் புதிய தொழில்நுட்ப முறைகள், பராமரிப்பு முறைகள், கொட்டகை அமைத்தல், ஆடுகளை தேர்வு செய்தல், ஆடுகளை கழிவுசெய்தல், சத்தான தீவனமளித்தல் ஆடுகளுக்கான தீவன உற்பத்தியை அதிகரிப்பதற்கான வழி முறைகள்: செயற்கை முறை கருவூட்டல், வெள்ளாடுகளில் ஏற்படும் நோய்கள் தடுப்பூசி போடுதல், புற மற்றும் அக ஒட்டுண்ணிகளை நீக்குதல் மற்றும் செய்முறை பயிற்சி அளிக்கப்படும்.

பங்கு பெற தகுதியானோர்

இதில் விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர் தொழில் முனைவோர்கள் இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். இப்பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும்.

முன் பதிவு செய்ய

இப்பயிற்சியில் கலந்து கொள்ள ஆர்வம் உள்ள விவசாயிகள், பண்ணையாளர்கள் முன்பதிவு செய்ய தொடர்பு கொள்ள 04286-266572 04286-266491/92 என்ற தொலைபேசி எண்ணையோ அல்லது 9443696557, 8867395422, 9790067179 என்ற அலைபேசி எண்ணையோ அழைக்கவும். பயிற்சிக்கு பதிவு செய்வதில் நாமக்கல் மாவட்ட விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும் பயிற்சிக்கு வரும் விவசாயிகள் தங்களுடைய ஆதார் எண்ணை கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும்.

இதையும் படிங்க: நீங்களும் ஒரு தொழில் முனைவோர் ஆகலாம்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Seraphinite AcceleratorBannerText_Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.