...
April 22, 2024
#செய்திகள்

நாமக்கல்லில் ஆண்களை விட பெண்களே அதிகம் : ஆட்சியர் வெளியிட்ட Exclusive ரிப்போர்ட்

நாமக்கல்லில் ஆண்களை விட பெண்களே அதிகம் : ஆட்சியர் வெளியிட்ட Exclusive ரிப்போர்ட்

நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 14.32 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியலை ஆட்சியர் வெளியிட்டார்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளிலும், ஏற்கனவே வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. பின்னர். புதிய வாக்காளர் சேர்த்தல், வாக்காளர் பட்டியல் திருத்தம் போன்றவற்றிற்காக மனுக்கள் பெறப்பட்டு, அவற்றின் மீது கள ஆய்வு செய்யப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டது. இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் உமா, இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டு, அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு வழங்கினார். இப்பட்டியல்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், தாசில்தார் வட்டாட்சியர் அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் பொதுமக்கள் பார்வையிடலாம்.

நாமக்கல் மாவட்டத்தில் இன்று வெளியிடப்பட்ட இறுதிவாக்காளர் பட்டியலின்படி, தொகுதி வாரியாக வாக்காளர்கள் விபரம்:

நாமக்கல் மாவட்டத்தின் இறுதி வாக்காளர் பட்டியல்
வ.எண் தாலுகா ஆண் பெண் மற்றவர்கள் மொத்தம்
1 ராசிபுரம் (தனி) 1,11,751 1,17,829 7 பேர் 2,29,587
2 சேந்தமங்கலம் (தனி/ எஸ்டி) 1,18,251 1,24,170 26 பேர் 2,42,447
3 நாமக்கல் 1,23,290 1,32,838 49 பேர் 2,56,177
4 பரமத்திவேலூர் 1,04,906 1,14,352 6 பேர் 2,19,264
5 திருச்செங்கோடு 1,11,074 1,18,021 48 பேர் 2,29,143
6 குமாரபாளையம் 1,24,4546 1,31,173 60 பேர் 2,55,689

நாமக்கல் மாவட்டத்தில் 6 சட்டசபை தொகுதிகளையும் சேர்த்து மொத்தம் 6,93,728 ஆண் வாக்காளர்கள், 7,38,383 பெண் வாக்காளர்கள், இதர வாக்காளர்கள் 196 என மொத்தம் 14 லட்சத்து 32 ஆயிரத்து 307 பேர் உள்ளனர். இறுதி வாக்காளர்பட்டியலில் புதியதாக சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28,892. கள விசாரணை செய்து நீக்கம் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,228 ஆகும்.  மேலும், வாக்காளர்பட்டியலில் புதியதாக சேர்க்கப்பட்டவர்களுக்கு வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைகள் சம்பந்தப்பட்ட தபால் அலுவலகம் மூலமாக வழங்கப்படும்.

இறுதி வாக்காளர்பட்டியல் வெளியீட்டின் தொடர்ச்சியாக, 2024ம் ஆண்டிற்கான தொடர் திருத்தப்பணிகள் நடைபெற உள்ளது. 1.1.2024 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் (அதாவது 31.12.2005 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ பிறந்தவர்கள்) தங்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ள விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்தார்.

மேலும், 17 வயது பூர்த்தியடைந்தவர்களும் தங்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ள விண்ணப்பிக்கலாம். இவர்களின் பெயரானது 18 வயது பூர்த்தியடையும் காலாண்டில் வெளியிடப்படும் வாக்காளர் பட்டியலில் இடம்பெறும்.

இதுவரை வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரினை சேர்த்துக் கொள்ளாதவர்களும், திருத்தங்கள் செய்ய
விரும்புபவர்களும் உரிய விண்ணப்பங்களை சம்மந்தப்பட்ட வட்டாட்சியர் / நகராட்சி அலுவலகங்கள் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களிலும் அளிக்கலாம்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர் ரெ.சுமன், வட்டாட்சியர் (தேர்தல்கள்) திருமுருகன், துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சினர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க : நாமக்கல் கவிஞருக்கு 20 லட்சம் ருப்பை மதிப்பில் சிலை 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Seraphinite AcceleratorBannerText_Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.