...
April 20, 2024
#செய்திகள்

சூடு பிடிக்கும் தேர்தல் களம் ; அதிரடியாக அறிவிப்பை வெளியிட்ட எம்.பி

விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நாமக்கல்லில் திமுக சார்பில் வருகின்ற 16-ம் தேதி பரப்புரை கூட்டம் நடைபெற உள்ளதாக மாநிலங்கவை உறுப்பினர் ராஜேஸ்குமார் தெரிவித்துள்ளார்.

விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நாமக்கல்லில் திமுக சார்பில் வருகின்ற 16-ம் தேதி பரப்புரை கூட்டம் நடைபெற உள்ளதாக மாநிலங்கவை உறுப்பினர் ராஜேஸ்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜேஸ்குமார்,. வெளியிட்டுள்ள அறிக்கையில்,

விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பின் பேரில், கடந்த 10 ஆண்டுகளில், மத்திய பாஜக அரசு, தமிழ்நாட்டிற்கு இழைத்த அநீதிகளையும், மத்திய அரசிடம் மாநிலத்தின் உரிமைகளை அடகு வைத்த அதிமுகவின் துரோகங்களையும், மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், முதற்கட்டமாக, “உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்” என்ற தலைப்பில் பரப்புரை நடைபெறுகிறது. வருகிற 16ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு நாமக்கல் பூங்கா சாலையில் , நாமக்கல் நாடாளுமன்ற தொகுதிக்கான பரப்புரை கூட்டம் நடைபெறுகிறது. இதில், மாநிலங்கவை உறுப்பினரும் திமுக கிழக்கு மாவட்ட செயலாளருமான ராஜேஸ்குமார், தலைமை வகிக்கிறார். நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றயுள்ளார்.

நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் மதுரா செந்தில், சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் டி.எம்.செல்வகணபதி, எம்எல்ஏக்கள் நாமக்கல் ராமலிங்கம், சேந்தமங்கலம் பொன்னுசாமி மற்றும் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட, நாமக்கல், சேந்தமங்கலம், ராசிபுரம், பரமத்தி வேலூர், திருச்செங்கோடு, சங்ககிரி ஆகிய சட்டசபை தொகுதிகளில் உள்ள நகராட்சி, டவுன் பஞ்சாயத்து தலைவர்கள், ஒன்றிய, நகர, பேரூராட்சி திமுக செயலாளர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள், இளைஞர் அணி நிர்வாகிகள், அனைத்து சார்பு அணி நிர்வாகிகள்,நகரமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் அனைவரும் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Seraphinite AcceleratorBannerText_Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.