May 10, 2024
நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும் 14ம் தேதி, கரும்பு பயிரில் இயற்கை முறையில் நோய் கட்டுப்பாடு என்ற தலைப்பில் இலவச பயிற்சி நடைபெறுகிறது.

கரும்பு பயிரில் இயற்கை முறையில் நோய் கட்டுப்பாடு : 14ம் தேதி இலவச பயிற்சி

நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும் 14ம் தேதி, கரும்பு பயிரில் ‘இயற்கை முறையில் நோய் கட்டுப்பாடு’ என்ற தலைப்பில் இலவச பயிற்சி நடைபெற உள்ளதாக வேளாண் அறிவியல் நிலையத்தின் தலைவர் டாக்டர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். இது குறித்து நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தின் தலைவர் டாக்டர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தில் (கேவிகே) வரும் 14ம் தேதி புதன்கிழமை காலை 10 மணிக்கு, கரும்பில் ஒருங்கிணைந்த […]

good news for students

மாணவர்களுக்கு ஓர் நற்செய்தி..!

நாமக்கல் மாவட்டம் பாச்சல் அருகே உள்ள ஞானமணி கல்லூரி வளாகத்தில், வருகின்ற 15-ம் தேதி கல்விக்கடன் விண்ணப்பங்களில் தகுதியான மாணவர்களுக்கு ஒப்புதல் ஆணை வழங்கப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாமக்கல் மாவட்ட நிருவாகமும் மாவட்ட முன்னோடி வங்கியும் (இந்தியன் வங்கி) இணைந்து நடத்தும் கல்வி கடன் முகாம் அனைத்து வங்கிகளின் சார்பில் வரும் 15.02.2024 அன்று காலை 9.00 மணி அளவில் ஞானமணி கல்லூரி வளாகத்தில் (NH -7) […]

Rescue of 126 bonded laborers in Namakkal district

7 ஆண்டுகளில் 126 கொத்தடிமை தொழிலாளர்கள் மீட்பு

நாமக்கல் மாவட்டத்தில், கடந்த 7 ஆண்டுகளில் 126 கொத்தடிமை தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) திருநந்தன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்த கலைக்குழு பிரசாரம், நாமக்கல், திருச்செங்கோடு மற்றும் சங்ககிரியில் உள்ள பேருந்து நிலையங்களில் நடத்தப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் 2017-ம் ஆண்டு ஆண்டு முதல் தற்போது வரை, கோழிப் பண்ணைகள், செங்கல் சூளைகள், நூற்பாலைகள் மற்றும் […]

நாமக்கல் அருகே சிப்காட் திட்டத்தை கைவிட வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சிப்காட் திட்டத்தை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்..!

நாமக்கல் அருகே சிப்காட் திட்டத்தை கைவிட வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் அடுத்த வளையப்பட்டி, பரளி, என்.புதுப்பட்டி ஊராட்சி பகுதியில் தமிழ்நாடு அரசின் தொழில்துறை மூலம் சுமார் 700 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் அமையவிருக்கிறது. இதற்கான நிலம் கையகப்படுத்துவதற்காக மோகனூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வளையப்பட்டி, பரளி, அரூர், புதுப்பட்டி, லத்துவாடி, உள்ளிட்ட பகுதிகளில் அதிகாரிகள் தொடர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். நிலம் கையகப்படுத்தப்பட்டால் ஏராளமான விவசாய நிலங்களும் விவசாயமும் […]

“மக்களுடன் முதல்வர்” திட்ட முகாமில் ரூ.5.27 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவி

வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் “மக்களுடன் முதல்வர்” திட்ட முகாமில் பயன்பெற்ற 1,033 பயனாளிகளுக்கு ரூ.5.27 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, பள்ளிபாளையம் நகராட்சிகள், மல்லசமுத்திரம் பேரூராட்சி பகுதிகளில் இன்று (10.02.2024) வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தலைமையில், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர்ஈ.ஆர்.ஈஸ்வரன், நகரமைப்பு மண்டல திட்டக்குழு உறுப்பினர் எஸ்.எம்.மதுரா செந்தில் ஆகியோர் முன்னிலையில் ”மக்களுடன் முதல்வர்” திட்ட முகாமில் பயன்பெற்ற 1,033 பயனாளிகளுக்கு ரூ.5.27 கோடி […]