May 7, 2024
#செய்திகள் #டிரெண்டிங் நியூஸ்

நடிகர் விஜய்யின் புதிய அரசியல் கட்சி துவக்கம் : நாமக்கல்லில் மக்கள் இயக்கத்தினர் கொண்டாட்டம்

நடிகர் விஜய்யின் புதிய அரசியல் கட்சி துவக்கம்

நடிகர் விஜய் இன்று தனது புதிய அரசியல் கட்சியின் பெயரை அறிவித்தார். இதனையடுத்து நாமக்கல்லில் விஜய் மக்கள் இயக்கத்தினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

நடிகர் விஜய் இன்று “தமிழக வெற்றி கழகம்” என்ற தனது புதிய அரசியல் கட்சியின் பெயரை அறிவித்துள்ளார். இதனை, தமிழகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் நாமக்கல் பூங்கா சாலையில், நாமக்கல் மேற்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர் நாமக்கல் பேருந்து நிலையம் அருகே பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். மேலும் நாமக்கல் நேரு பூங்காவில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்வில், மேற்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்க தலைவர் சதீஷ், புதுக்கோட்டை விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர் பர்வேஸ், நாமக்கல் மாவட்ட விஜய் மக்கள் இயக்க செயலாளர் ஏ.எஸ்.பாலா, இளைஞரணி பொருளாளர் முஸ்தபா, துணைத்தலைவர் அருண், துணைச் செயலாளர் சதிஷ், நகர தலைவர் விஜய் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க :↓↓↓

சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி பெண்களுக்கு பாலியல் தொந்தரவு

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *