May 8, 2024
#செய்திகள்

குமாரபாளையத்தில் வண்டி வேடிக்கை

குமாரபாளையத்தில் வண்டி வேடிக்கை

குமாரபாளையத்தில் காளியம்மன் மாரியம்மன் கோவில் பண்டிகையை முன்னிட்டு வண்டி வேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பக்தர்கள் கடவுள் வேடம் அணிந்தும், ராட்சத கடவுள் உருவங்கள் ஊர்வலமாக செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டுகளித்தனர்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் ஸ்ரீ காளியம்மன் மாரியம்மன் பண்டிகை கடந்த 13 ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து 15ம் நாள் தீமிதி திருவிழா விமர்சையாக நடைபெற்றது. பதினாறாம் நாளானநேற்று (29.02.24) வண்டி வேடிக்கை எனும் கடவுள் அவதார வேடங்களின் ஊர்வலம் நடைபெற்றது.

குமாரபாளையம் அருகே உள்ள கத்தேரி பிரிவு பகுதியில் இருந்து வாகனங்களில் பக்தர்கள் கடவுள் போன்ற வேடங்கள் அணிந்தும் மேலும் ராட்சத அளவிலான உருவங்கள் முருகன்- வள்ளி சிவன் ஆகிய கடவுள்களை வடிவமைத்து பொதுமக்களுக்கு ஆசிர்வாதம் வழங்குவது போல் சித்தரித்து வாகனங்களில் முக்கிய சாலைகளில் வலம் வந்தனர். மேலும் சில பக்தர்கள் அயோத்திராமர், சிவன் , மாரியம்மன் மற்றும் கன்னிமார், ஆதி சேசன் உள்ளிட்ட அவதாரங்களில் வேடம் அணிந்தும் ஊர்வலமாக வந்தனர். இதில் மாரியம்மன்- பத்ரகாளி வேடமணிந்து வந்த வாகனம் அனைவரின் மனதையும் பெரிதும் கவர்ந்தது. நிகழ்ச்சியைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாலையின் இருபுறமும் நின்று கண்டு களித்தனர்.