May 8, 2024
#செய்திகள்

குமாரபாளையத்தில் வெகுவிமர்சியாக நடைபெற்ற தேர் திருவிழா

குமாரபாளையத்தில் வெகுவிமர்சியாக நடைபெற்ற தேர் திருவிழா

குமாரபாளையத்தில் மாசி மாதம் நூற்றாண்டு பழமை வாய்ந்த காளியம்மன் பண்டிகையை முன்னிட்டு தேர் திருவிழா விமர்சியாக நடைபெற்றது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயமான நூற்றாண்டு பழமை வாய்ந்த ஸ்ரீ காளியம்மன் கோவில் திருவிழா ஆண்டுதோறும் மாசி மாதம் மூன்றாவது புதன்கிழமையன்று நடைபெறுவது வழக்கம். அதனை முன்னிட்டு தீமிதி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து விழாவின் 16-ம் நாளான நேற்று (29.02.24) தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக காளியம்மன் கோவில் மண்டபத்தில் அம்மன் திருக்கல்யாண உற்சவம் வேதங்கள் முழங்க நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் மற்றும் பெருமாள் உற்சவங்கள் வைக்கபட்டு கோவில் மைதானத்தில் இருந்து வடம்பிடித்து இழுக்கப்பட்டது.

நூற்றுக்கணக்கான பக்தர்கள் திரண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரானது ராஜா வீதி, தம்மன்ன செட்டியார் வீதி, புத்தர் தெரு, கலைமகள் வீதி உள்ளிட்ட பல்வேறு சாலைகளின் வழியே சென்று மீண்டும் நாளை மாலை கோவில் மைதானம் வந்து அடையும். இந்நிகழ்ச்சியில் தங்கள் இஷ்ட தெய்வத்திற்கான நேர்த்திக்கடனை செலுத்துவதற்கு சேலம்,நாமக்கல், ஈரோடு, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தும் திருத்தியரின் மீது உப்பு மிளகு பழம் மற்றும் நாணயங்கள் வீசி நேர்த்திக்கடனை செலுத்தினர்.