May 7, 2024
#செய்திகள்

திமுக எம்.பி.., டி.ஆர்.பாலுவை கண்டித்து நாமக்கல்லில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

BJP protested at Namakkal condemning DMK MP DR Balu

நாமக்கல்லில் திமுக எம்.பி.., டி.ஆர்.பாலுவை கண்டித்து நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாராளுமன்றத்தில் மத்திய இணை அமைச்சர் டாக்டர் L.முருகனை திமுக பாராளுமன்ற உறுப்பினர் T.R.பாலு விமர்சனம் செய்ததாக பாஜக சார்பில் குற்றசாட்டு முன்வைக்கப்பட்டது. இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் உள்ள பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்த வகையில், நாமக்கல் கிழக்கு மாவட்டம் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்டத் தலைவர் N.P. சத்தியமூர்த்தி தலைமையில் நாமக்கல் பூங்கா சாலையில், ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில், சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் மத்திய இணை அமைச்சர் L.முருகன் குறித்து விமர்சனம் செய்த திமுக பாராளுமன்ற உறுப்பினர் T.R.பாலு நிபந்தனை அற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இதில் பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த தேசிய, மாநில, மாவட்ட, அணி, பிரிவு தலைவர்கள், நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.