May 9, 2024
#செய்திகள்

திமுக நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை குழு வருகை ; கோரிக்கைகளை வழங்க எம்.பி அழைப்பு

நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து சங்களுக்கு கோரிக்கை மனுக்களை வழங்கலாம் என எம்.பி ராஜேஸ்குமார் தெரிவித்துள்ளார்.

திமுக நாடாளுமன்ற தேர்தல் அறிக்கைக்குழு வருகிற பிப்ரவரி 11 -ம் தேதி சேலம் வருகை தர உள்ளதால் நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து சங்களுக்கு கோரிக்கை மனுக்களை வழங்கலாம் என எம்.பி ராஜேஸ்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவுரையின் பேரில், நாடாளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, எம்.பி. கனிமொழி தலைமையில், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு தரப்பினர், தொழில் சர்ந்த சங்க பிரதிநிதிகள், பொதுமக்கள், கட்சி நிர்வாகிகளை சந்தித்து, தேர்தல் அறிக்கைக்கான பரிந்துரைகளை கேட்டு வருகிறது. அந்தவகையில், தூத்துக்குடியில் திமுக நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு, கடந்த 5-ம் தேதி கருத்து கேட்பு பணியை தொடங்கி பல்வேறு தரப்பினரிடம் இருந்து மனுக்களை பெற்றது.

அதன்படி, வருகிற பிப்ரவரி 11 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர், சேலம், ரேடிசன் ஓட்டலுக்கு வருகை தருகின்றனர். நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியின் வளர்ச்சியில் அக்கறை கொண்ட தமிழ்நாடு முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம், தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்கம். தமிழ்நாடு கோழி மற்றும் முட்டை பொருட்கள் ஏற்றுமதி சங்கம், லாரி உரிமையாளர்கள் சங்கம், லாரி ஓட்டுனர்கள் சங்கம், லாரி பாடி பில்டர் சங்கம், பால் உற்பத்தியாளர்கள் சங்கம், விசைத்தறி நெசவாளர்கள் சங்கம், விவசாய முன்னேற்ற சமூக சங்க கூட்டமைப்பு, பழங்குடியினர் நல மக்கள் மற்றும் வளர்ச்சி சங்கம், சிறு, குறு விவசாயிகள் சங்கம், வணிகர் சங்கங்கள், விவசாயிகளின் பிரதிநிதிகள், தொழில் முனைவோர், தொழிற்சங்கள், மாணவர் சங்கங்கள், அரசு ஊழியர்களின் பிரிநிதிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும், தங்களது நிறுவனம், தொழில் அமைப்புகள், சங்கங்கள் தொடர்பான மத்திய அரசின் சார்பில் நிறைவேற்ற வேண்டிய கோரிக்கை மனுக்கள் மற்றும் ஆலோசனைகளை, தேர்தல் அறிக்கைகுழுவினரிடம் நேரிலிலோ, கடிதம் மூலமாகவோ வழங்கலாம்.

மேலும், [email protected] என்ற இணையத்தள முகவரியிலும் கோரிக்கைகளை வழங்கலாம். மேலும் தொலைபேசி எண் : 08069556900, வாட்ஸ்அப் : 9043299441, ட்வீட் : #DMKManifesto2024 , முகநூல் பக்கம் DMKManifesto2024 வாயிலாகவும் தெரிவிக்கலாம் என எம்.பி கே.ஆர்.என் ராஜேஸ்குமார் தெரிவித்தார்.