May 7, 2024
#செய்திகள்

நாமக்கல்லில் ஈர நிலங்கள் விழிப்புணர்வு மனித சங்கிலி

நாமக்கல்லில் ஈர நிலங்கள் விழிப்புணர்வு மனித சங்கிலி

நாமக்கல்லில் சர்வதேச ஈர நிலங்கள் தினத்தை முன்னிட்டு, அரசு துறைகள் சார்பில் ஈர நிலங்கள் விழிப்புணர்வு மனித சங்கிலி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. கல்லூரி மாணவ- மாணவிகள், வனத்துறையினர் உள்ளிட்ட ஏராளமானோர் மனித சங்கிலியாக அணிவகுத்து நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

ஆண்டுதோறும், பிப்ரவரி 2-ம் நாள் சர்வதேச ஈர நிலங்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. வன வளங்களை மேம்படுத்தவும், பூமியை பாதுகாக்கவும், ஈரான் நாட்டின் இராம்சார் நகரத்தில் இது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 1971-ம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது முதல் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

இதனைமுன்னிட்டு, நாமக்கல்லில் தமிழ்நாடு அரசின் வனத்துறை மற்றும் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியின் தாவரவியல் துறை ஆகியவற்றின் சார்பில், நாமக்கல் பூங்கா சாலையில் சர்வதேச ஈர நிலங்கள் விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனை மாவட்ட வன அலுவலர் கே. இராஜாங்கம், தொடங்கி வைத்தார். நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி முதல்வர் A. ராஜா தலைமை வைக்க, தாவரவியல் துறை பேராசிரியரும் பசுமை மன்ற ஒருங்கிணைப்பாளருமான E.G. வெஸ்லி முன்னிலை வகித்தார்.

அப்போது நிலங்களை பாதுகாப்பதின் அவசியம் இராம்சார் காடுகளின் வளர்ச்சி ஆகிவை குறித்து மாவட்ட வனத்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

அப்போது, மாவட்ட வனத்துறை அலுவலர்கள், அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி மாணவ-மாணவிகள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் மனித சங்கிலியாக அணிவகுத்து நின்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தொடர்ந்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள், பூமியை பாதுகாக்கும் வகையில் மஞ்சப்பை ஆகியவை வழங்கப்பட்டன.

தொடர்ந்து நீர் நிலைகளை பாதுகாத்தல், பிளாஸ்டிக் பொருள்களால் பூமிக்கு ஏற்படும் தீமைகள், பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்தல் ஆகியவை குறித்தும் மாணவ மாணவிகள் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி தாவரவியல் துறை உதவி பேராசிரியர்கள் எம். சந்திரசேகரன், கே. பார்வதி எஸ். இராஜவேல், நாமக்கல் மாவட்ட டெக்கராஸ் ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் கண்ணன் கல்லூரி மாணவ மாணவிகள் வனத்துறை அலுவலர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *