May 9, 2024
#செய்திகள்

தீரன் சின்னமலை மாளிகையை எம்.எல்.ஏ ஈஸ்வரன் திறந்து வைத்தார்

தீரன் சின்னமலை மாளிகையை எம்.எல்.ஏ ஈஸ்வரன் திறந்து வைத்தார்

நாமக்கல்லில் கொங்குநாடு மக்கள் தேசிய அறக்கட்டளை சார்பில் கட்டப்பட்டுள்ள தீரன் சின்னமலை மாளிகையை, கொ.ம.தே.க. பொது செயலாளர் ஈஸ்வரன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

நாமக்கல் ஆட்சியர் அலுவலகம் அருகில், அரசு மருத்துவக்கல்லூரி சாலையில் , கொங்குநாடு மக்கள் தேசிய அறக்கட்டளை சார்பில், தீரன் சின்னமலை மாளிகை மற்றும், புதிய அலுவலக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடம் திறப்புவிழாவிற்கு அறக்கட்டளை தலைவர் எம்.பி சின்ராஜ் தலைமை வகித்தார். நாமக்கல் தெற்கு மாவட்ட கொ.ம.தே.க. தலைவர் மாதேஸ்வரன், எஸ்.எம்.ஆர். பஸ் சர்வீஸ் பரந்தாமன், குமரேசன், பாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கொங்கு வேளாள கவுண்டர்கள் பேரவை தலைவர் தேவராஜன், 100 அடி உயர கொடி கம்பத்தில் கொ.ம.தே.க. கொடியை ஏற்றி வைத்தார்.

கொ.ம.தே.க. பொது செயலாளரும், திருச்செங்கோடு எம்.எல்.ஏ.வுமான ஈஸ்வரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்து பேசினார். கொ.ம.தே.க. அலுவலகத்தை மலேசிய தொழிலதிபர் டத்தோ பிரகதீஷ்குமார் திறந்து வைத்தார். இ-சேவை மையத்தை கொ.ம.தே.க. பொருளாளர் பாலு திறந்து வைத்தார். முதலாவது ஓய்வு அறையை கொ.ம.தே.க. இளைஞரணி செயலாளர் சூரியமூர்த்தி திறந்து வைத்தார். இரண்டாவது ஓய்வு அறையை பி.எஸ்.கே. கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிர்வாக இயக்குனர் அசோக்குமார் திறந்து வைத்தார். கே.கே.பி. நிறுவனங்களின் சேர்மன் நல்லதம்பி, அமெரிக்க தொழில் அதிபர் செல்வம், கே.எஸ்.ஆர். கல்வி நிறுவனங்களின் தலைவர் சீனிவாசன், கிறிஸ்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் சஞ்சய் ஆகியோர் கல்வெட்டுகளை திறந்து வைத்தனர்.

மாநிலங்கவை உறுப்பினர் கே.ஆர்.என் ராஜேஸ்குமார், மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மதுரா செந்தில், நாமக்கல் எம்.எல்.ஏ ராமலிங்கம், நாமக்கல் நகர்மன்ற தலைவர் கலாநிதி, துணைத்தலைவர் பூபதி, முன்னாள் மத்திய இணை அமைச்சர் காந்திசெல்வன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ராமசாமி, சம்பத்குமார், மேற்கு மாவட்ட செயலாளர் நதிராஜவேல், வடக்கு மாவட்ட செயலாளர் செல்வராஜ், கொ.ம.தே.க. மாநில விவசாய அணி இணை செயலாளர் சந்திரசேகர், ஒருங்கிணைந்த நாமக்கல் மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ரவிச்சந்திரன், புறநகர் மாவட்ட பொறுப்பாளர் தமிழ்மணி உள்ளிட்ட பலர் விழாவில் கலந்துகொண்டனர். முடிவில் மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.

இதையும் படிங்க : நாமக்கல்லில் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நேரலை 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *