May 9, 2024
#செய்திகள்

நாமக்கல்லில் சின்ன வெங்காயம் சாகுபடி குறித்து இலவச பயிற்சி முகாம்

நாமக்கல்லில் சின்ன வெங்காயம் சாகுபடி குறித்து இலவச பயிற்சி முகாம்

நாமக்கல்லில் வருகிற 24ம் தேதி சின்ன வெங்காயம் சாகுபடி குறித்து இலவச பயிற்சி முகாம் நடைபெறுகிறது.

இது குறித்து, நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தின் (KVK) தலைவர் டாக்டர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நாமக்கல், மோகனூர் சாலையில், கால்நடை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள, வேளாண் அறிவியல் நிலையத்தில், வருகிற 24ம் தேதி புதன்கிழமை காலை 10 மணிக்கு, சின்ன வெங்காயத்தில் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் நிர்வாகம் என்ற தலைப்பில் ஒரு நாள் இலவசப் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

இப்பயிற்சியில் சின்ன வெங்காயப் பயிரைத் தாக்கும் பூச்சிகளையும், நோய்களையும், இயற்கை முறையில் கட்டுப்படுத்தும் முறைகள் பற்றியும், வளர்ச்சியூக்கிகள் பற்றியும், குறைந்த செலவில் அதிகம் லாபம் பெற தேவையான தொழில் நுட்பங்களும் தெளிவாக எடுத்துரைக்கப்படும். பயிற்சியில், விவசாயிகள், விவசாயம் சார்ந்த களப்பணியாளர்கள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள், தொழில் முனைவோர்கள் மற்றும் ஆர்வமுள்ள அனைவரும் கலந்து கொள்ளலாம்.


பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் 04286 266345, 266650, 7010580683, 9597746373, 9943008802 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்துகொள்ளலாம். பயிற்சிக்கு பதிவு செய்வதில் நாமக்கல் மாவட்ட விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும் பயிற்சிக்கு வரும் விவசாயிகள் தங்களுடைய ஆதார் எண்ணை கண்டிப்பாக பதிவு செய்யவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : புத்தக வாசகர்களுக்கு தீனி போடும் நாமக்கல் புத்தக கண்காட்சி 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *