May 6, 2024
#செய்திகள்

விவசாயிகளுடன் மாட்டு பொங்கலை கொண்டாடிய ஆட்சியர்

விவசாயிகளுடன் மாட்டு பொங்கலை கொண்டாடிய ஆட்சியர்

நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் ச.உமா மோகனூர் ஊராட்சி ஒன்றியம், ஓலப்பாளையம் கிராமத்தில் இன்று குப்புதுரை அவர்களது தோட்டத்தில் உழவர் திருநாளை விவசாயிகளுடன் மாட்டு பொங்கல் வைத்து கொண்டாடினார்.

தமிழர்களின் பண்டிகையான பொங்கல் பண்டிகை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அரசு சார்பில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் காவல் கண்காணிப்பாளர்களும்  அரசு துறை அதிகாரிகளுடன் பொங்கல் பண்டிகை வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது.

அதன்படி, நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தலைமையில், 12.01.2024 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுடன் பொங்கல் வைத்து விளையாட்டு போட்டிகளுடன் பொங்கல் திருநாள் விழாவினை சிறப்பாக கொண்டாடினர்.

சமத்துவபுரத்தில் சமத்துவ பொங்கல் 

தொடர்ந்து, இராசிபுரம் ஊராட்சி ஒன்றியம், கார்கூடல்பட்டி ஊராட்சி, பிலிப்பாக்குட்டை, பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் 13.01.2024 அன்று வனத்துறை அமைச்சர் மருத்துவர் மதிவேந்தன், மாவட்ட ஆட்சியர் மருத்துவர் உமா தலைமையில், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் முன்னிலையில், சுற்றுலா பொங்கல் மற்றும் சமத்துவ பொங்கல் விழாவினை சிறப்பாக கொண்டாடினர்கள்.

விவசாயிகளுடன் மாட்டு பொங்கலை கொண்டாடிய ஆட்சியர்

விவசாயிகளுடன் மாட்டு பொங்கல் 

அதன்படி, இன்று நாமக்கல் மாவட்டம் மோகனூர் ஊராட்சி ஒன்றியம், ஓலப்பாளையம் கிராமத்தில் குப்புதுரை என்ற விவசாயின் தோட்டத்தில் மாட்டு பொங்கலை கொண்டாடினர். மாட்டுப் பொங்கலை முன்னிட்டு விவசாயிகள் காலையிலேயே மாட்டு தொழுவத்தை சுத்தம் செய்து, மாடுகளை குளிக்க வைத்து, கொம்புகளை சீவி, வர்ணங்கள் பூசி, கூரான கொம்பில் குஞ்சம் அல்லது சலங்கை கட்டிவிட்டு அழகுபடுத்தினார்கள். இதேபோல் மாடுகளுக்கு பழைய மூக்கணாங் கயிறுகளை மாற்றி புதிய மூக்கணாங் கயிறுகளை மாட்டினார்கள். பின்னர், வழிபாடு நடத்தி மாடுகளுக்கு பொங்கல், கரும்பு, வாழைப்பழம் ஆகியவற்றை படைத்தனர், இதில் மாவட்ட ஆட்சியர் உமா கலந்து கொண்டு மாட்டு பொங்கலை விவசாயிகளுடன் கொண்டாடினர். அப்போது பொங்கலை மாடுகளுக்கு ஊட்டி பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினார். மாவட்ட ஆட்சியர் தங்களுடன் மாட்டு பொங்கலை கொண்டாட வருகை தந்தால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதையும் படிங்க ; திருச்செங்கோட்டில் பெண்கள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *