May 9, 2024
#செய்திகள்

WingsOfDMK ஹேஷ்டேக் – உடனடியாக இணைந்த நாமக்கல் மேற்கு மாவட்ட திமுகவினர்

#WingsOfDMK ஹேஷ்டேக் - உடனடியாக இணைந்த நாமக்கல் மேற்கு மாவட்ட திமுகவினர்

#WingsOfDMK ஹேஷ்டேகை அறிமுகப்படுத்திய சில வினாடிகளில் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுகவினர் உடனடியாக இணைந்தனர்.

நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் சமூக ஊடகங்களுக்கான பயிற்சி பாசறை கூட்டம் காணொளி காட்சி மூலம் சமூதாய கூடத்தில் நடைபெற்றது. இதில் நாமக்கல் மேற்கு மாவட்டதிமுக செயலாளர் மற்றும் மண்டல நகரமைப்பு குழு உறுப்பினர் மதுரா செந்தில் தலைமை வகித்தார்.

நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் சமூக ஊடகங்களுக்கான பயிற்சி பாசறை கூட்டம் கொங்கு வேளாளர் சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது. நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மற்றும் மண்டல நகரமைப்பு குழு உறுப்பினர் மதுரா செந்தில் தலைமையில் நடந்த கூட்டத்தில் மாநில திமுக இளைஞரணி செயலாளரும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுக தலைமைக் கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் சமூக ஊடகங்களில் திராவிட மாடல் கொள்கை, தமிழக முதல்வரின் செயல்பாடுகள் அவரது அரசின் திட்டங்கள் ஆகியவற்றை பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பது எப்படி என்பது குறித்து காணொளி காட்சி மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட நிர்வாகிகள் மகளிர் அணியினர் இளைஞர் அணியினர் உள்ளிட்ட பல்வேறு அணிகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் #WingsOfDMK என்ற ஹேஷ் டேக்கில் இணைத்து கொள்வது எப்படி என பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் உடனடியாக இதில் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுகவினர் தங்களை இணைத்துக் கொண்டது மகிழ்ச்சி அளிப்பதாக மாநில தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் டி.ஆர்.பி ராஜா காணொளி காட்சியில் தெரிவித்தார்.

இதையும் படிங்க ; திருச்செங்கோட்டில் 12 ஆண்டுகளுக்கு பிறகு விளையாட்டு போட்டிகள்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *