May 8, 2024
#செய்திகள் #விளையாட்டு

கேலோ இந்தியா – 2023 : விழிப்புணர்வு வாகனம் துவக்கம்

கேலோ இந்தியா - 2023 : பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள்

நாமக்கல்லில் கேலோ இந்தியா – 2023 ன் விழிப்புணர்வு வாகனம் துவக்கி வைக்கப்பட்டது.

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் நாட்டிலுள்ள இளைஞர்களிடையே விளையாட்டு கலாச்சாரத்தை வளர்பதற்கும் விளையாட்டில் சிறந்து விளங்குவதற்கும் மத்திய அரசின் சார்பில் நடத்தப்படுகின்ற ஒருங்கிணைந்த விளையாட்டு நிகழ்வாகும்.

தமிழ்நாடு முதலமைச்சர் எடுத்த நடவடிக்கையின் அடிப்படையில், கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் 2023-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் நடத்துவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்களால், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப்பட்டு 2023-ஆம் ஆண்டு கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளை தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சி ஆகிய நகரங்களில் 19.01.2024 முதல் 31.012024 வரை நடைபெறவுள்ளது.

விழிப்புணர்வு வாகனம் நாமக்கல் வருகை:

தமிழ்நாடு முழுவதும் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளின் செய்தியையும் உணர்வையும் பரப்பிட தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் விளம்பரம் மற்றும் கேண்டர் (டார்ச்) (Canter) சுற்றுப்பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கேண்டர் 11.01.2024 இன்று காலை நாமக்கல் மாவட்டத்திற்கு வருகை தந்தது.

இதனையொட்டி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாவட்ட ஆட்சியர் ச.உமா கேலோ இந்தியா – 2023 விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி மற்றும் விழிப்புணர்வு வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த அலங்கார ஊர்தியானது மாவட்ட விளையாட்டு அரங்கம், சி.எம்.எஸ் கல்லூரி, திருச்செங்கோடு கே.எஸ்.ஆர் கல்லூரி, அக்ஷரா அகாடமி, நாமக்கல் வேலம்மாள் பள்ளி ஆகிய இடங்களில் மாணவ மாணவிகள் பார்வையிடும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டது.

கேலோ இந்தியா - 2023 : பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள்

போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு:

தொடர்ந்து, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா தலைமையில், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழி குழுத்தலைவர் /பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினரும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவருமான வேல்முருகன் தலைமையில், குழு உறுப்பினர்/ சட்டமன்ற உறுப்பினர்கள் இரா.அருள் (சேலம் மேற்கு), மொ.பழனியாண்டி (ஸ்ரீரங்கம்), சட்டமன்ற உறுப்பினர்கள் கு.பொன்னுசாமி (சேந்தமங்கலம்), பெ.ராமலிங்கம் (நாமக்கல்), ஈ.ஆர்.ஈஸ்வரன் (திருச்செங்கோடு) ஆகியோர் முன்னிலையில், கேலோ இந்தியா – 2023 போட்டிகளை முன்னிட்டு நடைபெற்ற மினி மாரத்தான், திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, கட்டுரை போட்டி, பேச்சுப்போட்டி மற்றும் ஓவியப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற 18 நபர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

இதனைத்தொடர்ந்து, கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு கேலோ இந்தியா – 2023 விழிப்புணர்வு அலங்கார ஊர்தி வழி அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற பேரவை துணைச் செயலாளர் ஸ்ரீ.ரா.ரவி, மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர் ரெ.சுமன், மாவட்ட வருவாய் அலுவலர் / மேலாண் இயக்குநர் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை க.ரா.மல்லிகா, வருவாய் கோட்டாட்சியர்கள் மா.க.சரவணன் (நாமக்கல்), சே.சுகந்தி (திருச்செங்கோடு), மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எம்.சிவக்குமார், முதன்மை கல்வி அலுவலர் ப.மகேஸ்வரி, மாவட்ட விளையாட்டு அலுவலர் எஸ்.கோகிலா, உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க ; தொழிலாளர்களைத் தேடி மருத்துவம் திட்டம் மாவட்டம் முழுவதும் விரிவுப்படுத்தப்படும் – ஆட்சியர் உமா

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *