May 8, 2024
#செய்திகள்

நாமக்கல்லில் பருத்தி விவசாயிகள் திடீர் சாலைமறியல்

நாமக்கல்லில் பருத்தி விவசாயிகள் திடீர் சாலைமறியல்

நாமக்கல்லில் பருத்தி மூட்டைகள் மழையில் நனைந்ததை காரணம் காட்டி எடை பிடித்தம் செய்வதாக கூறி விவசாயிகள் சாலை மறியல் ஈடுபட்டதால் நாமக்கல் நகரில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் இன்று பருத்தி ஏலம் நடைபெற்றது. பருத்தி ஏலத்தில் நாமக்கல், துறையூர், களத்தூர், பவித்திரம், மேட்டுபாளையம், தொட்டியம், முசிறி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பருத்தி விவசாயிகள் 2000 பருத்தி முட்டைகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

இந்நிலையில் நாமக்கல் நகரில் இன்று காலை முதலே மழை பெய்து வந்தது. இதனால் ஏலத்திற்கு வைத்திருந்த பருத்தி மூட்டைகள் அனைத்து மழையில் நனைந்தது. இந்த சூழலில், பருத்தி மூட்டைகள் மழையில் நனைந்ததை
காரணம் காட்டி மூட்டை ஒன்றுக்கு 2 கிலோ எடை பிடித்தம் செய்வதாக கூட்டுறவு சங்க நிர்வாகம் அறிவித்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் 2 கிலோ எடைப் பிடித்தம் என்பதை கைவிட்டு ஒரு கிலோ எடையை மட்டும் பிடித்தம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் கூட்டுறவு சங்க நிர்வாகம் அதை ஏற்றுக் கொள்ளாத நிலையில் சங்க நிர்வாகத்தின் செயல்பாடுகளை கண்டித்தும், எடை பிடித்தம் செய்வதை கைவிட கோரியும் பருத்தி விவசாயிகள் 200-க்கும் மேற்பட்டோர் திடீரென நாமக்கல் – திருச்செங்கோடு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நாமக்கல் காவல் ஆய்வாளர் சங்கரபாண்டியன் மற்றும் காவல் துறையினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

இதையும் படிங்க : நாமக்கல்லில் வரும் 11 -ம் தேதி ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா, 1,00,008 வடை தயாரிக்கும் பணி தீவிரம்  

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *