May 11, 2024
#செய்திகள்

வாலிபால் விளையாடிய முன்னாள் அமைச்சர் தங்கமணி..

வாலிபால் விளையாடிய முன்னாள் அமைச்சர் தங்கமணி

குமாரபாளையத்தில் முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மற்றும் முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி ஜெயலலிதா ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பள்ளிபாளையம் வடக்கு மற்றும் தெற்கு ஒன்றியம், குப்பாண்டபாளையம் ஊராட்சி அம்மா ஸ்போர்ட்ஸ் கிளப் ஆகியோர் இணைந்து நடத்தும் முதலாம் ஆண்டு மின்னொளி கைப்பந்து போட்டியினை முன்னாள் அமைச்சரும், குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினருமான தங்கமணி துவக்கி வைத்தார்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் எம்.ஜி.ஆர் நகர் பேருந்து நிறுத்த பகுதியில், முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் 107-வது பிறந்த நாள் மற்றும் முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்களின் 76 வது பிறந்தநாள் ஆகியவற்றை முன்னிட்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் பள்ளிபாளையம் வடக்கு மற்றும் தெற்கு ஒன்றியம், குப்பாண்டபாளையம் ஊராட்சி அம்மா ஸ்போர்ட்ஸ் கிளப் ஆகியோர் இணைந்து முதலாம் ஆண்டு மின்னொளி கைப்பந்து போட்டி சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது.

 

வாலிபால் விளையாடிய முன்னாள் அமைச்சர் தங்கமணி

இதில் தமிழகத்தில் உள்ள ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 35க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டனர். இந்த போட்டியினை முன்னாள் அமைச்சரும், குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினருமான தங்கமணி விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்தும், டாஸ் போட்டும், முதல் சர்வீஸ் பந்தினை எறிந்தும் போட்டியை துவக்கி வைத்தார். மேலும் போட்டியில் கலந்து கொண்டுள்ள விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

இந்த போட்டியில் முதல் பரிசு பெறும் வீரர்களுக்கு 15 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் சுழற் கோப்பையும், இரண்டாம் பரிசு பெறும் வீரர்களுக்கு 12 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் சுழற் கோப்பையும், மூன்றாம் பரிசு பெறும் வீரர்களுக்கு 9 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் சுழற் கோப்பையும், நான்காம் பரிசு பெறும் வீரர்களுக்கு 6000 ரூபாய் ரொக்கம் மற்றும் சுழல் கோப்பையும் வழங்கப்பட உள்ளது.

இந்த நிகழ்வில், தகவல் தொழில்நுட்ப பிரிவு அணியைச் சேர்ந்த தரணிதரன், பள்ளிபாளையம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் செந்தில், வடக்கு ஒன்றிய கழக செயலாளர் குமரேசன், பள்ளிபாளையம் ஒன்றிய குழு உறுப்பினர் தனசேகரன் குப்பாண்டபாளையம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் புனிதா பிரபாகரன், உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க : சாலப்பாளையம் ஜல்லிக்கட்டு போட்டி : முகூர்த்த கால் நடும் விழா

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *